For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆன்டர்சனை வாழ்த்தினது இருக்கட்டும்... உன்னோட டார்கெட் 400.. ஞாபகம் இருக்கட்டும்

துபாய் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன்.

Recommended Video

Bravoவின் 500 Wickets சாதனை; T20ல் வரலாறு | OneIndia Tamil

இவருக்கு இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜேம்ஸ் ஆன்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஜஸ்பிரீத் பும்ராவும் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளை வீழ்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆன்டர்சன் சாதனை

ஜேம்ஸ் ஆன்டர்சன் சாதனை

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் இறுதிப்போட்டியில் இவர் தனது சாதனையை நிகழ்த்தியுள்ளார். அடுத்ததாக 700 விக்கெட்டுகளை நோக்கி தனது பயணம் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா வாழ்த்து

ஜஸ்பிரீத் பும்ரா வாழ்த்து

இவரது இந்த சாதனையையொட்டி சர்வதேச அளவில் பல்வேறு வீரர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய முன்னணி பௌலர் ஜஸ்பிரீத் பும்ராவும் டிவிட்டர் பக்கத்தின் மூலம் ஆன்டர்சனின் சாதனைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் மீதான ஆன்டர்சனின் ஆர்வம் மற்றும் அவரது திறமை அவரை வழிநடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பும்ராவிற்கு யுவராஜ் இலக்கு

பும்ராவிற்கு யுவராஜ் இலக்கு

இந்நிலையில் ஆன்டர்சனின் சாதனைக்கு யுவராஜ் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வேகப்பந்து வீச்சாளர் 600 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்துவார் என்று தான் நினைக்கவில்லை என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜஸ்பிரீத் பும்ராவின் டிவீட்டில் கமெண்ட் செய்துள்ள யுவராஜ், குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்.

14 போட்டிகள்.. 68 விக்கெட்டுகள்

14 போட்டிகள்.. 68 விக்கெட்டுகள்

இந்தியாவின் முன்னணி பௌலராக உள்ள ஜஸ்பீரித் பும்ரா, கடந்த 2018ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் பும்ரா தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார்.

Story first published: Thursday, August 27, 2020, 13:35 [IST]
Other articles published on Aug 27, 2020
English summary
Yuvraj Singh responded to Bumrah and gave him a target of his own
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+