மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணியில் உள்ள மூன்று நட்சத்திர வீரர்களை குறிக்கும் வகையில் கேஜிஎப் என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது கேஜிஎப் திரைப்படம். ஆக்சன் மாஸ் நிறைந்த இந்த திரைப்படத்தின் பெயரை வைத்து தங்கள் அணியின் மூன்று வீரர்களை ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இதில் கே ஜி எஃப் என்றால் கே, விராட் கோலியையும், ஜி கிளன் மேக்ஸ்வெலையும் குறிக்குமாம். இந்த மூன்று வீரர்களை தவிர ஆர்சிபி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய யூசுப் பதான் ஆர் சி பி அணி ஒரு அணியாக இணைந்து விளையாட வேண்டும்.

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, ஆர்சிபி அணியின் செயல்பாடு தொடரின் நடுவில் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். சிறப்பான தொடக்கத்தை அளித்துவிட்டு நடுவழியில் அவர்கள் தங்களுடைய வெற்றி பாதையை மறந்து விட்டார்கள். எனவே தங்களுடைய முழு திறமையும் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆர் சி பி அணி மேற்கொள்ள வேண்டும்.

விராட் கோலி போன்ற வீரர் rcb அணியை ப்ளே ஆப்க்கு கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று எனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர் சி பி அணி வெற்றி பெற்று ஆக வேண்டும். அப்படி இல்லையெனில் அந்த அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.