இந்திய அணியின் சிறந்த கால்பந்து வீரர் மகேந்திர சிங் டோனி தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்
மும்பை: இந்திய அணியின் சிறந்த கால்பந்து வீரர் மகேந்திர சிங் டோனி தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த உலகமும் ஆவலாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பற்றி தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. அதற்கு நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ?

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் உலகக்கோப்பை கால்பந்து பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து யுவராஜ் கூறியதாவது:
எனது ஆஸ்தான கால்பந்து அணி பிரேசில். கடந்த உலகக்கோப்பை வரை நான் பிரேசில் அணியை ஆதரித்தேன். இந்த ஆண்டு பிரான்ஸை ஆதரிக்கிறேன். அதற்கான காரணம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் பால் போக்பா.
இந்திய அணியின் சிறந்த கால்பந்து வீரர் டோனி. மோசமான வீரர்கள் ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா. அவர்கள் இருவரும் தங்களது கால்பந்து திறமையை மேம்படுத்த வேண்டும்.
விராட் கோஹ்லியும் கூட ஒரு சிறந்த கால்பந்து வீரர்தான். ஆனால் அவர் ஒருபோதும் கோல் அடித்தது இல்லை. ரோகித் சர்மா ஒரு ஆக்ரோஷமான கால்பந்து வீரர். அவர் பந்தை உதைத்து விட்டு நகராமல் அப்படியே இருப்பார். ஜாகீர் கான் கூட அதுபோல தான் என்று கூறியுள்ளார் யுவராஜ்சிங்.
ஆனால் உண்மையில் பாண்டியா ஒரு மிகபெரிய கால்பந்து விசிறி. சமீபத்தில் (ஜூன் 21) ,மான்சேஸ்டெர் யுனைடெட் அணி வீரர்கள் கையெழுத்திட்ட டி ஷிர்ட் அவருக்கு பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, June 23, 2018, 17:10 [IST]
Other articles published on Jun 23, 2018


Click it and Unblock the Notifications