கொஞ்சம் வேகமாக நடந்து செல் சகோதரா.... தனக்கு தானே கலாய்த்துக் கொண்ட யுவி.. ஒரே காமடிதான் பாஸ்
ஹைதராபாத்:நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கும் யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அவரை பற்றி பதிவிட்ட வீடியோவை அவரே கலாய்த்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான நாள் நெருங்கி கொண்டிருக்குகிறது. இந்தியா மட்டுமல்லாது.. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
அனைத்து அணிகளும் போட்டிகளுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களது வலைப்பயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

டுவிட்டர் வீடியோ
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டது. அதில், அதிரடி ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் வலைப்பயிற்சியை மேற்கொள்வதற்காக மெதுவாக நடந்து செல்கிறார்.
வேகமாக நட சகோதரா
இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவை யுவராஜ், கொஞ்சம் வேகமாக நடந்து செல் சகோதரா என்று பதிவிட்டுள்ளார்.

ஜாலியான யுவராஜ்
இதன்மூலம் அவர் தன்னைத் தானே ஜாலியாக கலாய்த்து கொண்டு இருக்கிறார்.பஞ்சாப், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக யுவராஜ் சிங் விளையாடி இருக்கிறார். இதுவரை 128 ஐபிஎல் போட்டிகளில் 2 ஆயிரத்து 692 ரன்களை எடுத்துள்ளார்.

ரூ.1 கோடி விலை
வரும் ஐபிஎல் தொடருக்காக மும்பை அணி அவரை 1 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் வாங்கியது. கடந்த ஐபிஎல் சீசனில் சோபிக்காத யுவராஜ் இந்த முறை தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications