Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் "பலம்" , நியூசிலாந்தின் "பலகீனம்" - யுவராஜ் சிங் "நெத்தியடி" பதில்

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், இந்திய அணி சந்திக்கவிருக்கும் முக்கிய சவால் குறித்து யுவராஜ் சிங் எச்சரித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்குகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சவுத்தாம்ப்டன் ஸ்டேடியத்தில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீரர்கள் பயிற்சிக்கு கிளம்புவார்கள் என்று தெரிகிறது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து கூறுகையில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு குறைந்தது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டால் கூட, அடுத்த இரண்டு போட்டிகளில் நீங்கள் மீண்டு வர முடியும். ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி விளையாடி வருவதால், ஒரேயொரு போட்டி மட்டும் பைனலில் நடைபெறுவது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.

இந்தியாவின் பலம்

இந்தியாவின் பலம்

நீங்கள் 8 - 10 பயிற்சி செஷனில் ஈடுபடலாம். ஆனால், அது எதுவும் பயிற்சி ஆட்டங்களுக்கு ஈடாகாது. பயிற்சி செஷன் ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும், நியூசிலாந்துக்கு தான் சாதகம் அதிகம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் பலம் பேட்டிங். வெளிநாடுகளில் நாம் சிறப்பாக ஆடி வருகிறோம். அதேசமயம், நியூசிலாந்தின் பலம் பவுலிங்.

தவவமைப்பு

தவவமைப்பு

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாகி விட்டார். மொத்தமாக 7 சதங்களும், தொடக்க வீரராக 4 சதங்களும் அடித்திருக்கிறார். ஆனால், இதற்கு முன் இங்கிலாந்தில் ரோஹித்தும், ஷுப்மன் கில்லும் ஓப்பனிங் இறங்கியது கிடையாது என்பது பின்னடைவு. இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் விரைவில் ஸ்விங் ஆகும் என்பதால், அதிலிருக்கும் சவால்களை இருவரும் அறிவார்கள். அந்த சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது குறித்து அவர்களுக்கு தெரியும்.

வெற்றிகரமாக அமையலாம்

வெற்றிகரமாக அமையலாம்

இங்கிலாந்தில், காலையில் பந்து ஸ்விங் ஆகும். வேகமும் கைக்கொடுக்கும். அதேசமயம், மதியம் நீங்கள் ரன்களை குவிக்க முடியும். டீ பிரேக் பிறகு, பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக, நீங்கள் இந்த விஷயங்களை மாற்றியமைக்க முடிந்தால், நீங்கள் வெற்றிகரமாக இருக்க முடியும்

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

ஷுப்மன் மிகவும் இளம் வீரர். போதிய அனுபவம் இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவில் அவர் சிறப்பாக விளையாடியது குறித்து அவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அவருக்கு தன் மேல் நம்பிக்கை இருந்தால், அவர் உலகின் எந்த நாட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும்" என்று யுவராஜ் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 7, 2021, 16:29 [IST]
Other articles published on Jun 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+