சச்சின் சார்.. என்னோட ஆட்டத்தைப் பார்த்தீங்களா.. சும்மா வெறித்தனம்.. அசத்திய சிறுமி!
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் கண்ணைக் கட்டி பேட் செய்து போங்காட்டாம் ஆடியதுதான் டிவிட்டரில் நேற்று முழுவதும் வைரலாக இருந்தது. ஆனால் அதற்கு ஒரு சிறுமி தானும் வித்தியாசமாக ஆடி போட்டிருந்த டிவீட்தான் அதை விட பெரிய ஹைலைட்.
Recommended Video
யுவராஜ் சிங் ஒரு சவால் விட்டிருந்தார். அதாவது பேட்டின் சைட் வாக்கில் பந்தை அடிக்க வேண்டும். பந்து கீழே விழக் கூடாது. இந்த சவாலுக்கு ரெடியா என்று சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோருக்கு அவர் சவால் விட்டிருந்தார்.
இதை ஏற்ற சச்சின் டெண்டுல்கரும் அதேபோல பந்தை சைட் வாக்கில் அடித்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார். ஆனால் அதன் பிறகுதான் செம டிவிஸ்ட் வைத்திருந்தார் சச்சின்.

கண்ணைக் கட்டிக் கொண்டு பேட்டிங்
சச்சின் போட்டிருந்த வீடியோவில் கண்ணைக் கட்டிக் கொண்டு பந்தை அடித்தார். இதைப் பார்த்த பலரும் அடடே சச்சின் பயங்கரமான ஆளா இருக்காரேய்யா என்று மெய் சிலிர்த்துப் போய் விட்டனர். ஒரு பந்தை கூட மிஸ் செய்யாமல் தொடர்ந்து அடித்து வந்த சச்சின் யுவராஜ் சிங் நீங்க சொன்ன சவாலில் நான் ஜெயிச்சுட்டேன் பார்த்தீங்களா என்று கூறியிருந்தார்.

செம டிவிஸ்ட்
அதன்பிறகுதான் டிவிஸ்ட்டே.. எல்லாம் முடிந்த பிறகு தனது கண்களைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார் சச்சின். அவிழ்த்து முழுமையாக அதைத் தூக்கிக் காட்டிய பிறகுதான் தெரிந்தது, அந்தத் துணி வழியாக எல்லாமே நல்லா தெரிந்தது. அதாவது அந்த துணி வழியாக பேட்டை நன்றாக பார்த்தபடிதான் பந்தை அடித்துள்ளார் சச்சின். இதை அவரே அம்பலப்படுத்திய பிறகு ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்க.. அதுதான் சச்சின்.

சிறுமியின் அதிரடி
இதைப் பார்த்து பலரும் வித்தியாசமான முறையில் பந்தடித்து வீடியோ போட்டுள்ளனர். அதில் ஒறு சிறுமி போட்ட வீடியோதான் சூப்பர். அந்த சிறுமியும் சச்சினை விட பெரிய கில்லாடிதான் போல. அதாவது மரத்தில் ஒரு கயிறை வைத்து பந்தைக் கட்டியுள்ளார். பிறகு அந்த பந்தை ஜாலியாக நின்று கொண்டே படு நிதானமாக அடிக்கிறார். பந்து போகிறது வருகிறது.. ஆனால் சிறுமி கொஞ்சம் கூட அசரவே இல்லை.. நிறுத்தி நிதானமாக அடிக்கிறார்.

காமெடி பேட்டிங்
லாக்டவுன் காலம் என்பதால் அத்தனை பேரும் செம போரடித்துப் போயுள்ளனர். எனவே எதையாவது செய்து பொழுதைக் கழிக்க வேண்டிய நிலையில உள்ளனர். அப்படித்தான் சச்சினும், யுவராஜ் சிங்கும் இப்படி விளையாடியுள்ளனர். அதற்கு இந்த சிறுமி போட்ட தில்லாலங்கடி மட்டையடி உண்மையிலேயே செம காமெடி.. பலரையும் இந்த சிறுமியின் நூதன பேட்டிங் கவர்ந்து விட்டது.


Click it and Unblock the Notifications