Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி குறித்து சர்ச்சை கருத்து.. தந்தை குறித்து மவுனத்தை கலைத்த யுவராஜ்.. பின்னணியே இது தான்

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் தோனியும் யுவராஜ் சிங்கமும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் தோனி இந்திய அணியின் கேப்டனான பிறகு யுவராஜ் சிங் 2011 உலக கோப்பைக்கு பிறகு பெரிய அளவில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இதற்கு யுவராஜ் சிங் உடல்நல ஒரு காரணமாக இருந்தாலும் பல இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்து விட்டார்கள். ஆனால் தோனி ஏதோ பாலிடிக்ஸ் செய்து கேப்டன் பதவி வாங்கி விட்டார் என்பது போல் யுவராஜ் சிங்கும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

yuvraj singh yograj singh ms dhoni cricket

இந்த நிலையில் யுவராஜ் சிங் தந்தையான யோகராஜ் சிங், தோனி குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளை விமர்சனமாக வைப்பது உண்டு. ஒருமுறை தோனி காசு இல்லாமல் தான் திரிவார் என்று எல்லாம் பேசி இருக்கிறார். இதற்கு காரணம் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி தான் முடித்து விட்டதாக அவர் சாடியுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து தோனியை குறித்து யுவராஜ் சிங் தந்தை தரம் தாழ்த்தி விமர்சித்து வரும் நிலையில் அதனை ஏன் யுவராஜ் சிங் தடுக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதுகுறித்து யுவராஜ் தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கிறார். தனது தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்றும் தாம் சிறுவயதில் பேட்டிங்கில் ரன் சேர்க்கவில்லை என்றால் என்னை வீட்டிலே அவர் சேர்க்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தாம் எப்போதெல்லாம் பேட்டிங்கில் ரன் சேர்க்கவில்லை என்றால் வீட்டிற்கு வராமலே காரிலே படுத்து தூங்கி விடுவேன். ஒரு முறை சதம் அடித்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் வந்து தந்தையிடம் கூறினால் ஏன் இரட்டை சதம் அடிக்கவில்லை என்று தந்தை கேட்பார் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும் தனது தந்தையும் தாயும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதனால் தமக்கு வீட்டில் நிம்மதி இல்லை என்று யுவராஜ் கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது தந்தை தாய் மோதல் முற்றி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் நமது தாய் வீட்டில் தான் சிறிது நேரம் காலத்தை கழித்ததாகவும் யுவராஜ் கூறியுள்ளார். இதனால் யுவராஜ் சிங் தனது தந்தையுடன் பேச்சு வார்த்தையில் இல்லை என்றும் இதனால் தான் யுக்ராஜ் சிங் கூறும் கருத்துக்கு யுவராஜ் சிங் எந்த ஒரு மறுப்பையும் கருத்தையும் வெளியிடவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Monday, September 2, 2024, 23:53 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+