Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.4500 கோடி மல்டி மார்க்கெட்டிங் மோசடியில் யுவராஜ்சிங், ஹர்பஜனுக்கு தொடர்பு?

டெல்லி: பெர்ல்ஸ் நிறுவனத்தின் ரூ.45,000 கோடி மதிப்பிலான பொன்சி மோசடியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ்சிங்குக்குத் தொடர்பு இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து செயல்படும் பெர்ல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்மல் சிங் பாங்கூவை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். பல்வேறு மாநிலங்களில் மக்களிடம் இருந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் ரூ.45,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Yuvraj Singh, Harbhajan Singh linked to Rs 45,000 crore ponzi scam

அந்த நிறுவனம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்பான்சராகவும் இருந்தது. இதனால், ஹர்பஜன் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அந்த நிறுவனம் சார்பில் பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மேலும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால், பெர்ல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் தொடர்புடைய பிரபலங்கள் மற்றும் அதனால் பயன்பெற்றவர்களின் பட்டியலை சிபிஐ தயாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த புகாரை மறுத்துள்ள யுவராஜ் சிங்கின் தாய் சப்னம், பெர்ல்ஸ் நிறுவனம் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு நிலம் ஒதுக்குவதாகக் கூறி எங்களை அணுகியது. ஆனால், அதுபோன்றதொரு நிலத்தினை நாங்கள் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 14, 2016, 17:46 [IST]
Other articles published on Jan 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+