For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி.. காதலியுடன் பென் கட்டிங்.. ஆட்டையைக் கலைத்த யுவராஜ் சிங்!

Recommended Video

காதலியுடன் பென் கட்டிங்.. ஆட்டையைக் கலைத்த யுவராஜ் சிங்!..வைரல் வீடியோ

பிராம்ப்டன் : எதிரணி வீரர் பென் கட்டிங் தன் காதலியுடன் பேசிக் கொண்டு இருந்த போது குறுக்கே புகுந்து முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டு விட்டு ஓடிவிட்டார்.

யுவராஜ் சிங் கனடாவின் குளோபல் டி20 என்ற உள்ளூர் டி20 தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.

அந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இரண்டாம் போட்டியில் அசத்தல் ஆட்டம் ஆடினார். அந்தப் போட்டிக்கு முன்பு தான் அந்த சம்பவம் நடந்தது.

முதல் போட்டி சொதப்பல்

முதல் போட்டி சொதப்பல்

இந்த தொடரின் முதல் போட்டியில் யுவராஜ் சிங் மிகவும் சொதப்பலாக ஆடினார். பந்தை சரியாக அடிக்க முடியாமல் திணறினார். டெஸ்ட் போட்டி போல ஆடிக் கொண்டு இருந்த அவர் ஒரு கட்டத்தில் அவுட்டே ஆகாமல், ஸ்டம்பிங் ஆனதாக தானே களத்தை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

பென் கட்டிங் பேட்டி

பென் கட்டிங் பேட்டி

அடுத்த போட்டியில் என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யுவராஜ், அருகே பென் கட்டிங் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தார்.

யுவராஜ் சிங் என்ன செய்தார்?

பென் கட்டிங் தன் காதலியும், வருங்கால மனைவியுமான எரிக் ஹோலன்ட்டுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார். இருவரும் கனடா பற்றி சீரியஸாக பேசிக் கொண்டு இருந்த போது வேகமாக குறுக்கே புகுந்த யுவராஜ் சிங், "எப்ப கல்யாணம்? நேரம் போகுது. சீக்கிரம் கல்யாணத்துக்கு தயார் ஆகுங்க" என்றார். அதைக் கேட்டு இருவரும் சிரிக்கத் துவங்கினர்.

யுவராஜ் அபார ஆட்டம்

யுவராஜ் அபார ஆட்டம்

பின்னர், இரண்டாம் போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாக ஆடினார். மூன்று சிக்ஸ், மூன்று ஃபோர் அடித்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அசத்தினார். கனடா வாழ் இந்திய ரசிகர்கள் யுவராஜ் சிங்கின் அசத்தல் ஆட்டத்தை கண்டு குஷியானார்கள்.

அந்த பிளாட் சிக்ஸ்

அந்த பிளாட் சிக்ஸ்

அதிலும் யுவராஜ் சிங் அடித்த ஒரு பிளாட் சிக்ஸ் அனைவரையும் கவர்ந்தது. பாகிஸ்தான் ஸ்பின்னர் ஷதாப் கான் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அதில் இரண்டாவது சிக்ஸ் தான் பிளாட்டாக சென்றது. அதைக் கண்டு மனம் வெறுத்துப் போனார் ஷதாப் கான்.

யுவராஜ் சிங் அடித்த பிளாட் சிக்ஸ்.. வெறுத்துப் போன பாக். வீரர்.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

Story first published: Monday, July 29, 2019, 14:34 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
Yuvraj Singh interfere Ben Cutting’s interview with his lover
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X