சச்சின் 194 ரன்கள் எடுத்த போது டிக்ளேர்.. களத்தில் என்ன நடந்தது? டிராவிட்டை விமர்சித்த யுவராஜ் சிங்
மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்திருந்த போது அப்போதைய கேப்டன் டிராவிட் இன்னிங்சை டிக்ளேர் செய்தார்.
19 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம், டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையில் கரும்புள்ளியாக இருந்தது.

இந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங் தற்போது பேசியுள்ளார்.
முல்தான் டெஸ்டில் சேவாக் முச்சதம் அடித்திருந்தார். சச்சின் 194 ரன்கள் எடுத்திருந்தார். 162வது ஓவரில் யுவராஜ் சிங் 59 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அப்போது தான் டிக்ளேர் செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார் ராகுல் டிராவிட். இது குறித்து பேசிய யுவராஜ்.நாங்கள் களத்தில் இருந்த போது எங்களுக்கு டிரஸிங் ரூம்மிலிருந்து மெசஜ் வந்தது.
விரைவில் டிக்ளேர் செய்ய உள்ளோம். விரைவாக ரன் குவிக்கும் படி சொன்னார்கள். நாங்களும் செய்தோம். சச்சினுக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்தால் நிச்சயம் இரட்டை சதம் அன்று அடித்திருப்பார். மூன்றாவது இல்லை நான்காவது நாளில் இருக்கும் போது ஒரு வீரர் 150 ரன்கள் அடித்திருக்கும் போது டிக்ளேர் செய்யலாம்.
ஆனால் அந்த போட்டியில் நாங்கள் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தோம். நேரம் நிறைய இருந்தது. ஒரு 2 ஓவர் கூடுதலாக பேட் செய்து இரந்தால், அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தி இருக்காது. என்னை பொறுத்தவரை அன்று அணி நிர்வாகம் செய்தது தவறு தான்.


Click it and Unblock the Notifications