Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னை விட சிறந்த பவுலிங்..”.. வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய ஜாம்பவான் யுவராஜ் சிங்.. என்ன சொன்னார்?

பெங்களூர்: 2026 துலீப் டிராபி தொடரில் அசத்தி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள கலகலப்பான பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தன்னை விட வைபவ் சூர்யவன்ஷியின் பவுலிங் ஸ்டைல் நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் ஜொலித்து வருகிறார். கால் இறுதிப் போட்டியில் அவர் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனைப் பாராட்டும் வகையில், அவரது ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், யுவராஜ் சிங் பந்துவீசும் படத்தையும், வைபவ் பந்துவீசும் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தது.

Yuvraj Singh Praises Vaibhav Suryavanshi says He Got Better Bowling Action Than Him

இந்தப் பதிவைப் பார்த்த யுவராஜ் சிங், "என்னை விட அவரிடம் சிறந்த பந்துவீச்சு ஸ்டைல் உள்ளது" என்று கமெண்ட் செய்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களையும் சேர்த்து மொத்தம் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த கலகலப்பான பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

துலீப் டிராபி கால் இறுதியில் பந்துவீச்சில் ஜொலித்த வைபவ் சூர்யவன்ஷி, அடுத்து மத்திய மண்டலத்திற்கு எதிரான அரையிறுதியில் பேட்டிங்கிலும் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். அவர் 42 பந்துகளில் அரைசதம் அடித்து, 92 ரன்கள் குவித்து கிழக்கு மண்டல அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் துலீப் டிராபியில் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் 15 வயதிலேயே அசத்தும் வைபவ் சூர்யவன்ஷி, பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

யுவராஜ்-க்காக சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த சவுரவ் கங்குலி.. என்ன நடந்தது?

யுவராஜ்-க்காக சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த சவுரவ் கங்குலி.. என்ன நடந்தது?
Story first published: Tuesday, September 1, 2026, 11:50 [IST]
Other articles published on Sep 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+