For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. தன் துயர நாட்கள் பற்றி சொல்லும் யுவராஜ் சிங்

Recommended Video

புற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்- வீடியோ

மும்பை : யுவராஜ் சிங் இந்தியாவுக்கு 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பெரும் பங்காற்றினார்.

அந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் யுவராஜ் சிங் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது தொடர் நாயகன் விருதும் வென்று அசத்தினார் யுவராஜ் சிங்.

எனினும், அதன் பின் அவருக்கு புற்று நோய் இருப்பதாக வந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது. அதில் இருந்து யுவராஜ் மீண்ட போது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

[ஹைதராபாத்-ல இந்தியா தோத்துகிட்டே இருந்துச்சு.. இப்ப ஜெயிச்சுகிட்டே இருக்கு.. எப்படி?]

அதிர்ச்சி அடைந்த யுவராஜ்

அதிர்ச்சி அடைந்த யுவராஜ்

ஆனால், யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது. அதை பற்றி யுவராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். "உலகக்கோப்பை வெற்றியின் உச்சத்துக்கு பின் புற்று நோய் பற்றி தெரிய வந்தது பெறும் அதிர்ச்சியாக இருந்தது. என் மகிழ்ச்சி அனைத்தையும் எடுத்துக் கொண்டது. என் வாழ்வின் இருண்ட பகுதி அது" என குறிப்பிட்டுள்ளார் யுவராஜ் சிங்.

வாழ்க்கை பற்றி சொல்லும் யுவராஜ் சிங்

வாழ்க்கை பற்றி சொல்லும் யுவராஜ் சிங்

"உலகக்கோப்பை வென்று, அதில் தொடர் நாயகன் விருது வென்று, ஒரு மலையின் உச்சியில் நீங்கள் இருப்பீர்கள். திடீரென ஒரு பள்ளத்தில் விழுந்து விடுவீர்கள். இது தான் வாழ்க்கை. அதை நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். உங்களுக்கு வேறு வழியும் இல்லை" என வேதனையோடு கூறினார் யுவராஜ் சிங்.

மீண்ட யுவராஜ்

மீண்ட யுவராஜ்

புற்று நோயில் இருந்து மீண்ட யுவராஜ் சிங் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் கிரிக்கெட் ஆடினார். 2012 நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். எனினும், ஆட்டத்தில் பல தடுமாற்றங்களை சந்தித்த யுவராஜ், 2017இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்தது மட்டுமே நல்ல விஷயமாக இருந்தது. அதன்பின், பார்ம் இழந்தார் யுவராஜ்.

உள்ளூர் கிரிக்கெட்டில் யுவராஜ்

உள்ளூர் கிரிக்கெட்டில் யுவராஜ்

இந்திய அணியில் தன் இடத்தை இழந்த அவர் தன் மீது கொண்ட நம்பிக்கையால் 2019 உலகக்கோப்பை தொடரில் இடம் பிடிக்கும் நோக்கில் விஜய் ஹசாரே தொடரில் ஆடி வருகிறார். இந்த தொடரில் 7 போட்டிகளில் 264 ரன்கள் எடுத்துள்ளார் யுவராஜ். அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து சிக்ஸர்கள் பறக்க விட வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை.

Story first published: Friday, October 12, 2018, 18:34 [IST]
Other articles published on Oct 12, 2018
English summary
Yuvraj Singh recalls his Cancer took all joy of his life after World cup victory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+