Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோல் மாடலும் இல்லை.. கொஞ்சம் கூட மரியாதை தெரியலை.. இளம் வீரர்கள் மீது பாயும் யுவராஜ் சிங்

டெல்லி: ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகைக் கலக்கியவர் யுவராஜ் சிங். புற்றுநோயுடனும் போரிட்டு மீண்டு வந்தவர். இந்த நிலையில் இக்காலத்து இளம் வீரர்களுக்கு, மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை என்று பாய்ந்துள்ளார்.

Recommended Video

Yuvraj Rohit chat on Instagram | Young players get carried away easily, says Yuvraj

ரோஹித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் கலந்து கொண்டார் யுவராஜ் சிங். அப்போது பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில்தான் இந்த கருத்தை அவர் முன்வைத்தார்.

இந்திய அணியில் நிலவும் கலாச்சாரம் குறித்தும் அவர் கூறியதால் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் தற்போது பெரிய அளவில் ரோல்மாடல்கள் என்று யாருமே இல்லை என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

வித்தியாசம் நிறைய இருக்கே

வித்தியாசம் நிறைய இருக்கே

இப்போதைய அணிக்கும் இதற்கு முந்தைய அணிக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து கூறுங்கள் என்று ரோஹித் சர்மா கேட்டதற்கு யுவராஜ் சிங் பதிலளிக்கையில், நான் இந்த அணிக்கு வந்த சமயத்திலும், அதேபோல நீங்க இந்த அணிக்கு வந்தபோதும் மூத்த வீரர்களிடம் இளம் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டனர். நல்ல மதிப்பு வைத்திருந்தனர். மூத்த வீரர்களும் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தனர் என்று கூறினார்.

அப்போது சோசியல் மீடியா கிடையாது

அப்போது சோசியல் மீடியா கிடையாது

அந்த சமயத்தில் சோசியல் மீடியாவும் கிடையாது. எனவே எல்லாமே கட்டுப்பாட்டுடன் இருந்தனர். திசை திருப்பல்கள் கிடையாது. சீனியர்கள் எப்படி விளையாடுகிறார்கள், என்ன மாதிரியான டெக்னிக்கை கையாளுகிறார்கள் என்பதை இளம் வீரர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். கடுமையாக உழைப்பார்கள். சீனியர்களிடம் போய்ப் பேசி கற்றுக் கொள்வார்கள். மீடியாக்களுடன் எப்படி பேச வேண்டும் என்பதை கவனிப்பார்கள் எறும் தெரிவித்துள்ளார்.

இமேஜ் மிகவும் முக்கியம்

இமேஜ் மிகவும் முக்கியம்

இந்தியாவுக்காக விளையாடி விட்டால் நீங்கள் உங்களுடைய இமேஜ் குறித்து கவலைப்பட வேண்டும். அது முக்கியம். ஆனால் இப்போது இந்த ஜெனரேஷனிடம் அது இருப்பதாக தெரியவில்லை. சீனியர்களிடம் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். விராட் கோலி இருக்கிறார். 3 வகையான கிரிக்கெட்டிலும் பிரமாதமாக ஆடக் கூடியவர். ரோல் மாடல் என்று இன்று நிறையப் பேர் இல்லை என்று யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர்கள் லேசாக எடுத்துக் கொள்கிறார்கள்

ஜூனியர்கள் லேசாக எடுத்துக் கொள்கிறார்கள்

இன்றுள்ள ஜூனியர்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்கிறார்கள். எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் ரொம்ப ஈஸியாக பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்களது சீனியர்களிடம் ரொம்ப கவனமாக பழகுவோம். எனது நாட்களாக இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் சர்ச்சைக்குரிய டாக் ஷோ போல் எல்லாம் நடந்திருக்காது. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட விஷயத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாங்க எதாவது தப்பு செஞ்சா.. ஏய் இப்படி செய்யாதே என்று எங்களைத் திருத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

நினைத்ததை செய்ய வேண்டும்

நினைத்ததை செய்ய வேண்டும்

ஜூனியர்கள் தாங்கள் நினைத்ததை செய்யவே ஆசைப்படுகிறார்கள். சீனியர்கள் பேச்சைக் கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதேசமயம், இளைஞர்களை முழுமையாக தவறு கற்பிக்கவும் கூடாது. இளம் வயதிலேயே அவர்களுக்கு ஐபிஎல் வாய்ப்புகள் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு டிஸ்டிராக்ஷன் ஜாஸ்திதான். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதேசமயம், நல்ல கவுன்சிலிங் கொடுக்கலாம். இந்த வேலையை சீனியர்கள், கோச்சுகள் உள்ளிட்டோர் செய்ய வேண்டும் என்றார் யுவராஜ் சிங்.

ஆமோதித்த ரோகித் சர்மா

ஆமோதித்த ரோகித் சர்மா

யுவராஜ் சிங் சொன்னதில் பலவற்றை தான் ஆமோதிப்பதாக கூறிய ரோகித் சர்மா, நான் டீமுக்கு வந்தபோது சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா ஆகியோர்தான் ஜூனியர்களாக இருந்தனர். மற்ற அனைவருமே சீனியர்கள்தான். அப்போது நல்ல அட்மாஸ்பியர் இருந்தது. இப்போது லேசாகி விட்டது. நான், ஐந்து, ஆறு இளம் வீரர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருககிறேன். ரிஷப் பந்த்துடன் நிறையவே பேசியுள்ளேன். அவரிடம் நிறைய இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்றார் அவர்.

Story first published: Friday, April 10, 2020, 10:48 [IST]
Other articles published on Apr 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+