Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் தந்தை மனநிலை சரியில்லை.. ஆனால், ஒப்பு கொள்ள மாட்டார்.. தோனி சர்ச்சை - யுவராஜ் சிங் கடும் தாக்கு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி யுவராஜ் சிங் தந்தையை கடுமையாக விமர்சித்து இருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. யுவராஜ் சிங் தோனிக்கு முன்பே இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்டார் வீரராக இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையின் சரிவுக்கு தோனி தான் காரணம் என்று அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் கடும் விமர்சனத்தை அவ்வப்போது வைப்பார்.

யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கு பின்னணியில் தோனி தான் என்றும் அவர் அவ்வப்போது பல கருத்துக்களை கூறியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி குறித்து பேசிய யுவராஜ் தந்தை, தோனி தனது இறுதி காலகட்டத்தில் கையில் பணமே இல்லாமல் இருப்பார் என்றும் சாடி இருந்தார்.

yuvraj singh yograj singh ms dhoni cricket

இந்த நிலையில் தோனி குறித்து அண்மையில் பேசிய யோக்ராஜ் சிங், நான் தோனியை என்றுமே மன்னிக்க மாட்டேன். அவர் என்றும் கண்ணாடி முன் நின்று பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக இருந்து அவர் என் மகனுக்கு எதிராக செய்ததெல்லாம் ஒன்னு ஒன்றாக வெளியே வரும். இதன் காரணமாக, அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத சம்பவங்கள் நிகழும்.

தோனி தான் என் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார். தோனி நினைத்திருந்தால் யுவராஜ் சிங் இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். என் மகனைப் போல் ஒருவரை உங்களால் பெற்று எடுக்க முடியுமா என யோகராஜ் சிங் கடுமையாக திட்டி இருந்தார். மேலும் கபில்தேவ் என்னை அணியை விட்டு நீக்கினார். அப்போது இனி உங்களால் எந்த ஒரு கோப்பையும் வெல்ல முடியாது என்று நான் சாபம் விட்டேன்.

இப்போது பாருங்கள். யுவராஜ் சிங் 13 கோப்பையை வென்றிருக்கிறார். ஆனால் கபில்தேவ், ஒரு கோப்பையை தான் வென்று இருக்கிறார் என யோக்ராஜ் திட்டி இருந்தார். யோக்ராஜ் சிங் இந்த பேச்சு கடும் விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. யோக்ராஜ் தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் நிலையில் தனது தந்தையை யுவராஜ் சிங் தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.

மேலும் தன் தந்தை பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு கருத்தையும் அவர் வெளியிட்டதில்லை என்று ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். யுவராஜ் சிங் தன் தந்தையுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற விஷயம் அவருடைய சுயசரிதையில் வெளியாகி இருக்கிறது. தன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால்தான் தந்தை யோக்ராஜ் சிங் குறித்து யுவராஜ் சிங் எந்த ஒரு வீடியோவிலும் பேட்டியிலும் பேசியது இல்லை. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தமது தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டுள்ள யுவராஜ், இந்த விஷயம் குறித்து தனது தந்தை தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்று யுவராஜ் சிங் கூறி இருக்கிறார். தனது தந்தை குறித்து யுவராஜ் சிங் பேசிய 7 மாதத்திற்கு முன்பு பேசி உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Tuesday, September 3, 2024, 11:38 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+