Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல குவாலிபை ஆகுங்க… அப்புறம் ஜெயிக்கிறத பத்தி பேசுங்க.. முன்னாள் வீரரை கழுவி ஊத்திய யுவி

மும்பை: முதலில் தகுதி பெறுங்கள், பின்னர் வெற்றி பெறுவது பற்றி பேசுங்கள் என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி தந்துள்ளார் யுவராஜ் சிங்.

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் தோல்விக்குப் பிறகு வங்கதேசத்தை சந்தித்தது இந்தியா. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

Yuvraj singh supports to rohit sharma and criticizes former england player kevin pieterson

ரோகித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அவர் 4 சதங்களை விளாசி இருக்கிறார். உலகக் கோப்பையில் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார்.

நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் (544) எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். இதை பாராட்டிய யுவராஜ் சிங் டுவிட்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ரோகித் ஷர்மா தொடர் நாயகன் விருதுக்கு அருகில் செல்கிறார். ஹிட்மேன் யூ பியூட்டி 100 நம்பர் 4. மிகச் சிறப்பான ஆட்டம் சாம்பியன் என்று கூறியுள்ளார். அதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், விளக்கம் அளித்துள்ளார்.


அவர் அதில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றால் அது நடக்காது என்று கூறியுள்ளார். அவருடைய ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள யுவராஜ் சிங், முதலில் தகுதி பெறுங்கள். பிறகு வெற்றி பெறுவது பற்றி பேசுங்கள். நான் தொடர் நாயகன் விருது பற்றி கூறுகிறேன். வெற்றி பெறுவதை பற்றி அல்ல என்று தெறிக்க விட்டுள்ளார்.
Story first published: Tuesday, July 2, 2019, 21:25 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+