Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கம் வென்ற மின்னல் வீரர் உசேன் போல்ட்டுக்கு "யுவராஜ்சிங்" வாழ்த்து...

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 200மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள ஜமைக்காவின் மின்னல் வீரர் உசேன் போல்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உசேன் போல்ட்டுடன் இருந்த தருணங்களையும் யுவராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் உசேன் போல்ட். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அவர், ஒலிம்பிக்ஸில் 100 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Yuvraj singh wished Usain Bolt

இந்நிலையில் தற்போது அவர் 200மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று மீண்டும் தங்கம் பெற்றுள்ளார். இதன் மூலம் 2-வது ஹாட்ரிக் சாதனையையும் அவர் ஒலிம்பிக்ஸில் பதிவு செய்துள்ளார். இந்த தங்கப்பதக்கத்துடன் சேர்த்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் உசேன் போல்ட் இதுவரை 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் உசேன் போல்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தாம் உசேன் போல்ட்டுடன் பங்கேற்ற நட்பு ரீதியிலான ஓட்டப்பந்தயத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.

உலகின் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட்டும், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மோதும் நட்பு கிரிக்கெட் போட்டி பெங்களூரில் கடந்த 2014-ம் நடைபெற்றது நினைவிருக்கலாம். அதில், உசேன் போல்ட் தலைமையில் ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒரு அணியும் மோதின.

இந்த 2 அணிகளிலும் 7 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் போது உசைன் போல்ட், யுவராஜ் சிங் ஆட்டமிழந்தால் பெவிலியன் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக 4 ரன்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அப்போட்டி நடத்தப்பட்டது.

இந்நிலையில் முதலில் ஆடிய யுவராஜ் சிங் அணி 58 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த உசேன் போல்ட்டின் அணிக்கு கடைசி இரு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்சர்கள் அடித்து தனது அணிக்கு வெற்றி பெறச் செய்தார் உசேன் போல்ட்.

இதன் பின்னர், நடைபெற்ற 100மீ ஓட்டப்பந்தயத்தில் யுவராஜ் சிங் மற்றும் உசேன் போல்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நட்பு ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுள்ள நிலையில், யுவராஜ் சிங் தான் உசேன் போல்ட்டுடன் இருந்த நினைவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரியோ ஒலிம்பிக்ஸ் 200மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றதற்கும், 8-வது தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளதற்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, August 19, 2016, 13:41 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+