Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த முறை 37 ரன்ல அவுட் ஆனா கழுத்தை பிடிச்சு தூக்கிடுவேன்.. ரோஹித்தை மிரட்டிய யுவராஜ் சிங்

மும்பை : யுவராஜ் சிங் இன்று தன் 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

அதில் ரோஹித் சர்மாவின் வாழ்த்திற்கு நன்றி கூறி பதில் அனுப்பிய யுவராஜ், அப்படியே ரோஹித் சரியாக ஆடாததற்கு மிரட்டலும் விடுத்தார்.

ரசிகர்களும் ரோஹித்துக்கு யுவராஜ் விட்ட மிரட்டலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு..

சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு..

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் நன்றாக ஆடி வந்த போது திடீரென சிக்ஸ் அடிக்க முற்பட்டார். முதலில் அடித்த சிக்ஸ் கேட்ச் ஆகாமல் தப்பித்தது. ஆனால், அடுத்து அடித்த பந்து கேட்ச் ஆனது.

ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

தேவையில்லாத ஷாட் ஆடி அவுட் ஆகிவிட்டார் என பல ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். யுவராஜ் சிங் அதை மறக்காமல், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன போது, அவரை அப்படியே மிரட்டியுள்ளார்.

யுவராஜ் வாழ்த்து சொன்னார்

ரோஹித் தனது வாழ்த்தில் யுவராஜ் சிங், தன் கழுத்தை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதை வைத்தே ரோஹித்தை மிரட்டியுள்ளார் யுவராஜ். மறுபடியும் 37 ரன்களில் அடுத்த டெஸ்டில் ஆட்டமிழந்தால், இந்த படத்தில் இருப்பது போல கழுத்தை பிடித்து விடுவேன் என செல்ல மிரட்டல் விடுத்தார்.

ரோஹித்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகம் தான். ரோஹித் பெர்த் களத்தில் எளிதாக ரன் குவிக்க முடியும் என முன்பு கூறியிருந்தார். மூத்த வீரர் என்ற அடிப்படையில் ரோஹித் இரண்டாம் டெஸ்டில் இடம் பெறலாம்.

Story first published: Wednesday, December 12, 2018, 17:30 [IST]
Other articles published on Dec 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+