Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எனக்கும், குல்தீப்புக்கும் தோனி செய்த உதவி.. 50 சதவீத வேலையை..".. ரகசியத்தை உடைத்த சாஹல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைசிறந்த ஃபினிஷர் மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களின் மிகப்பெரிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு பேட்டர்களின் பலவீனங்களை நொடியில் கணித்துவிடும் வித்தை அவரிடம் இருந்தது. இது சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. தோனி தங்களுக்கு எப்படி உதவினார் என்பது குறித்து சாஹல் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் சாஹல் பேசுகையில், "தோனி களத்தில் இருந்ததால் எனக்கும் குல்தீப் யாதவுக்கும் 50 சதவீத வேலை ரொம்பவே சுலபமாக முடிந்துவிடும். தனது அபார அனுபவத்தால் விக்கெட்டுக்கு பின்னால் இருந்தபடியே ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார். 'அனாவசியமாக எதையும் முயற்சி செய்யாதே, ஸ்டம்பை மட்டுமே குறிவைத்து வீசு' என்று பின்னால் இருந்து சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் பேச்சைக் கேட்டாலே எதிரணி பேட்டர்கள் தானாக அவுட்டாகி விடுவார்கள்" என்றார்.

Yuzvendra Chahal Credits MS Dhoni For His Bowling Success and Explained How he Helped Him

மேலும், 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் ஒருநாள் போட்டியில் சாஹல் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "அந்தப் போட்டியில் ஜேபி டுமினி பேட்டிங் செய்தபோது தோனி என்னிடம் வந்தார். 'சாஹல், பந்தை ஸ்டம்பை நோக்கியே வீசு, உன் விருப்பப்படி வேகத்தை மட்டும் மாற்று' என்றார். அதன்படியே டுமினி ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற 2 அல்லது 3-வது பந்தை நான் மிக மெதுவாக வீசினேன். அதில் அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். எங்கள் பந்துவீச்சு கூட்டணிக்கு களத்திலேயே ஒரு பயிற்சியாளர் போல தோனி செயல்பட்டார். எங்களின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு மிக அதிகம்" என்றார். அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்களில் சுருண்டது, இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

"25 வருஷமா உங்க அசிஸ்டெண்ட்டா தானே இருக்கேன்".. கங்குலி அழைத்தவுடன் யுவராஜ் சிங் சொன்னது இதுதான்!

தோனியின் ஓய்வு குறித்து சாஹல் கூறுகையில், "அவர் ஓய்வு பெற்றது நிச்சயம் எங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே புரிய வைத்து எங்களை முதிர்ச்சியடையச் செய்துவிட்டார். எனக்கும் குல்தீப்புக்கும் தேவையான எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்து அவர் தயார்படுத்திவிட்டார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Story first published: Thursday, October 15, 2026, 18:03 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+