Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லார்கிட்டயும் ப்ரெண்ட் ஆயிடுவாரு... ஆர்சிபிக்காக 100வது போட்டி... விராட் பாராட்டு!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 6வது போட்டியில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகள் மோதி வருகின்றன.

தொடர்ந்து ஆர்சிபியின் செல்ல பிள்ளை போன்று கடந்த 2014 முதல் அணிக்காக விளையாடி வருகிறார் யுஸ்வேந்திர சஹல்.

இந்நிலையில் இன்றைய போட்டி மூலம் 100வது ஐபிஎல் போட்டியை ஆர்சிபிக்காக விளையாடும் சஹல் குறித்து அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி -எஸ்ஆர்எச்

ஆர்சிபி -எஸ்ஆர்எச்

ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகிறது.

2014ல் ஆர்சிபிக்காக தேர்வு

2014ல் ஆர்சிபிக்காக தேர்வு

ஆர்சிபியின் முக்கிய பௌலராக உள்ளவர் யுஸ்வேந்திர சஹல். அது மட்டுமின்றி இந்திய அணியிலும் விராட் கோலியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவர். இந்நிலையில் கடந்த 2014ல் அவர் ஆர்சிபிக்காக தேர்வு செய்வதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3 சீசன்களில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

121 விக்கெட்டுகள்

121 விக்கெட்டுகள்

இந்நிலையில் இன்றைய எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக தன்னுடைய 100வது போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் யுஸ்வேந்திர சஹல். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 121 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இதனிடையே ஒரே அணிக்காக தான் 100 போட்டிகளில் விளையாடுவேன் என்று எப்போதும் நினைத்து பார்த்ததில்லை என்று சஹல் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

அவரது 100வது போட்டியையொட்டி அவக்கு பாராட்டு தெரிவித்துள்ள விராட் கோலி, இது அவருக்கு பெருமையான தருணம் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் அவர் ஆர்சிபியின் முக்கிய வீரராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் பல போட்டிகளின் சிறப்பான மாற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டீ வில்லியர்ஸ் பாராட்டு

டீ வில்லியர்ஸ் பாராட்டு

சஹல் மிகவும் அருமையான கேரக்டர் என்றும், எல்லாரிடமும் நட்புடன் பழகுவார் என்றும் விராட் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மிகவும் அரிதான கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார். அணியின் டீ வில்லியர்சும் சஹல் தன்னுடைய சகோதரர் போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 22:52 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+