For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு இடம் கிடைக்குமா?இடத்தை உறுதி செய்ய என்ன வழி?ஜாகீர் கான் அறிவுரை

வெல்லிங்டன் : டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இதனால் நியூசிலாந்து தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய அணியில் உம்ரான் மாலிக் , முகமது சிராஜ் சர்துல் தாக்கூர் ஆகியோர் திரும்பி உள்ளனர்.

காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதனால் உம்ரான் மாலிக் உலகக் கோப்பை டி20 அணியில் இடம் பெற வேண்டும் என பல முன்னணி வீரர்களும் கருத்து தெரிவித்தனர்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

எனினும் அனுபவம் இன்மை காரணத்தால் உம்ரான் மாலிக்கிற்கு டி20 உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்காக இதுவரை மூன்று சர்வதேச t20 போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக் ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 13 ரன்கள் வழங்கியிருக்கிறார். இதுவரை இரண்டு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். எனினும் மாலிக்கின் வேகம் இந்திய அணிக்கு தேவை என்ற கருத்து தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

பலவிதமான பவுலர்கள்

பலவிதமான பவுலர்கள்

இதனால் நியூசிலாந்து தொடரில் அவர் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து முன்னாள் வீரர் ஜாகிர் கான் கூறியுள்ளார். அதில் ஒவ்வொரு அணியிலும் பலவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியில் ஒரு ஸ்விங் பவுலர் ,ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர், மற்றொரு வீரர் அதிவேகமாக பந்து வீசக் கூடியவர் என வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளனர்.

ஏற்ற ஆடுகளம்

ஏற்ற ஆடுகளம்

நியூசிலாந்து போன்ற ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற மைதானங்கள் ஆக இருக்கும். எனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கு தான் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை நான் கைப்பற்றினேன். அடுத்த டெஸ்ட் போட்டியிலும் என்னால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. ஏனென்றால் அந்த அளவுக்கு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

உறுதியாக கிடைக்கும்

உறுதியாக கிடைக்கும்

இதனால் இந்திய அணியில் உள்ள இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உம்ரான் மாலிக் திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இது போன்ற போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் தான் அவருக்கு அனுபவம் கிடைக்கும். இந்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை நிரூபித்தால் நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம் உறுதியாக கிடைக்கும் என்று ஜாகிர் கான் கூறியுள்ளார் .

ரவி சாஸ்த்ரி கருத்து

ரவி சாஸ்த்ரி கருத்து

இதே கருத்தை கூறியுள்ள ரவி சாஸ்திரி டி20 உலக கோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுப் எப்படி பந்து வீசினார் என்று நாம் பார்த்தோம். உம்ரான் மாலிக் அணியில் இருந்திருந்தால் அவரும் இப்படி பந்து வீசி இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். இந்தியா நியூசிலாந்து அணி முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் வரும் இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது இந்த போட்டி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

Story first published: Friday, November 18, 2022, 14:42 [IST]
Other articles published on Nov 18, 2022
English summary
Zaheer khan and Ravi shastri gives support to umran malik to be selected in indian team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+