Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டை வச்சு என்னதான் செய்றீங்க.. ஆஸ்திரேலியா அணியுடனான சொதப்பல்.. ஜாகீர் கான் சரமாரி கேள்வி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுமோசமாக தோல்வியடைந்தது குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் கடுமையாக சாடியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு சரமாரியான கேள்விகள் அடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி கண்ட சூழலில் 2வது போட்டியில் படுமோசமாக தோற்றுள்ளது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது. இதன்பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 121 ரன்களை அடித்து வெற்றி கண்டது.

2வது போட்டி

2வது போட்டி

தோல்வியை விட இந்திய ரசிகர்கள் பெரிதும் கவலைப்படும் ஒரு விஷயம் பவர் ப்ளே ஓவர்கள் தான். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து விக்கெட்கள் சென்றுவிடுகின்றன. உஇடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி அனைத்து விக்கெட்டையும் இழந்தது தான் பிரச்சினையாகியுள்ளது. மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் சிக்கி ரோகித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், முகமது சிராஜ் என 5 முக்கியமான விக்கெட்கள் பரிதாபமாக சென்றன. இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் தடுமாறுகின்றனரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜாகீர் விளாசல்

ஜாகீர் விளாசல்

இந்நிலையில் இதுகுறித்து ஜாகீர் கான் பேசியுள்ளார். அதில், முதல் போட்டியை பாருங்கள், ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்குள் இந்திய பவுலர்கள் சுருட்டிவிட்டனர். ஆனால் இந்த முறை அதுபோன்று ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் எந்தவித சரியான சூழலையும் அமைத்து தராதது தான். எதுபோன்ற சூழலை உருவாக்கி தருகின்றனர் என்பது தான் முக்கியமான ஒன்று.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

கடந்த 2 போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்குள் நிறைய விக்கெட்களை இழந்துவிடுகின்றனர். கையில் பேட்டை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் செய்கிறீர்கள். டாப் ஆர்டர் சொதப்புவதால் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு ஒரு நல்ல அடித்தளம் கிடைக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க் ஓப்பனிங்கில் விக்கெட் எடுப்பதால், அடுத்து வரும் பவுலர்களும் அதே நம்பிக்கையுடன் அழுத்தத்தை போடுகின்றனர். அதே போல தான் பேட்டிங்கிலும் இருந்திருக்க வேண்டும்.

மீட்டிங் வேண்டும்

மீட்டிங் வேண்டும்

இந்திய அணி இதற்காக தனியாக ஒரு ஆலோசனைக்கூட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுத்து அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும். அப்போது தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களது பகுதி பணிகளை சரியாக செய்ய முடியும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 20, 2023, 18:50 [IST]
Other articles published on Mar 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+