ஜாகிர் கானுக்கு கல்யாணம் செய்யும் நேரம் வந்து விட்டது-தந்தை ஏக்கம்
புனே: எனது மகனுக்கு கல்யாணம் செய்யும் நேரம் வந்து விட்டது. இனியும் அவன் தாமதம் செய்யாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று ஜாகிர்கானின் தந்தை பக்தியார் கான் ஏக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்தியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான். நடந்து முடிந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் 21 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். அப்ரிதியுடன் இணைந்து அவரும் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் ஜாகிர்கானின் திருமணம் குறித்து அவரது தந்தை பக்தியார் கான் விருப்பம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எங்களது மகனின் குறிக்கோளாக இருந்தது. இப்போது அது நிறைவேறி விட்டது. இனியாவது அவன் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டும்.
2007ம் ஆண்டிலேயே நாங்கள் கல்யாணம் செய்ய விரும்பினோம். ஆனால் அப்போது இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்னர் பார்க்கலாம் என்று ஜாகிர் கூறி விட்டான். நாங்களும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.
இப்போதுதான் கோப்பை வந்து விட்டதே. இனியாவது அவன் கல்யாணம் செய்து கொள்வான் என்று நினைக்கிறோம். எவ்வளவு விரைவில் கல்யாணத்தை செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தி வைக்க ஆர்வமாக உள்ளோம் என்றார் பக்தியார்.
சீக்கிரம் செட்டிலாகுங்க ஜாகிர் பாய்!
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
