Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாகிருக்கு 300வது விக்கெட்.. ஆனால், தவறான அவுட்டால் வீழ்ந்த கல்லிஸ்!

ஜோஹன்னஸ்பர்க்: இந்தியாவின் ஜாகிர் கானுக்கு இன்று 300வது விக்கெட்டாக வந்து சேர்ந்தார் ஜேக்கஸ் கல்லிஸ். ஆனால் நடுவர்களின் தவறான அவுட்டால் இந்தப் பெருமை ஜாகிருக்குக் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது.

தென் ஆப்பிரிக்காவின் வெற்றித் துரத்தலை மிகவும் பொறுப்போடு இன்று தொடங்கியிருந்தார் கல்லிஸ். ஆனால் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவர் பந்தை முன்வந்து அடிக்க முயன்றபோது இந்தியர்கள் எல்.பிடபிள்யூ கோரினர். அதை ஏற்று நடுவரும் அவுட் என்று கூறி விட்டார்.

Zaheer scalps 300th wicket, but Kallis fell victim for umpiring error

இந்த முடிவு கல்லிஸுக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. தான் அவுட்டாகவில்லை என்று அவர் நினைத்ததை அவரது முகமும் காட்டியது, டிவி ரீப்ளேயும் காட்டின. இருப்பினும் நடுவரின் தீர்ப்பு மாறவில்லை. இதனால் கல்லிஸ் வெளியேறினார்.

கல்லிஸ் வெளியேற்றம் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது. தனது 34 ரன்களில் 6 பவுண்டரிகளை விளாசியிருந்தார் கல்லிஸ்.

Story first published: Sunday, December 22, 2013, 15:49 [IST]
Other articles published on Dec 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+