தடுக்கும் கால்கள்-கனவாகும் கோல்கள்-தவிக்கும் மெஸ்ஸி!

பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக பிராங்க் ரிஜ்கார்ட் இருந்தபோது அவரது உதவியாளராக இருந்தவர் ஹெங்க் டென் கேட். இவர் பிரிட்டோரியாவில் நடந்த அர்ஜென்டினா அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களின் பயிற்சியைப் பார்வையிட்டார். பின்னர் மெஸ்ஸிக்கு தனியாக பல ஆலோசனைகளையும், டிப்ஸ்களையும் வழங்கினார்.
நெதர்லாந்து நாட்டைச் சேரந்தவரான டென்கேட் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோல் போட முடியாமல் தவிப்பதாக மெஸ்ஸி கூறினார். அது உண்மைதான். காரணம், மெஸ்ஸி போன்ற கவர்ச்சிகரமான, சிறப்பான வீரர்கள் விளையாடும்போது அவரை எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் குறி வைத்து சூழ்ந்து விடுகின்றனர். இதனால் கோல் போட முடியாமல் போய் விடுகிறது.
இப்படி எதிரணியினர் நடந்து கொள்வது தவறாகும். அவர்கள் அனைத்து வீரர்களையும்தான் குறி வைக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் முடக்குவது நியாயமற்றது. இதை நடுவர்களும் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது.
இருப்பினும் ஜெர்மனிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நிலைமை மாறும். நிச்சயம் மெஸ்ஸி கோலடிப்பார். ரசிகர்கள் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications