ஜெர்மனியை வீழ்த்துவோம்-மாரடோனா

கடந்த முறையும் அர்ஜென்டினாவும், ஜெர்மனியும் காலிறுதிப் போட்டியில் மோதின. அதில் ஜெர்மனி வென்று விட்டது. இதனால் அதைப் பழி வாங்க அர்ஜென்டினா காத்துள்ளது.
என்ன வேடிக்கை என்றால் கடந்த முறை அர்ஜென்டினா அணியில் இடம் பெற்றிருந்த லியோனல் மெஸ்ஸி அந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்தமுறையும் மெஸ்ஸி இருக்கிறார். இவரை வைத்துதான் இப்போது ஜெர்மனியை வீழ்த்த களம் அமைத்துள்ளார் மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி 3 முறை சாம்பியனாகியுள்ளது. அர்ஜென்டினா 2 முறை சாம்பியனான அணி. அர்ஜென்டினா அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக இருந்த மாரடோனா இப்போது பயிற்சியாளராக வந்துள்ளார். அவரது மனதில் ஜெர்மனியை பழிவாங்கும் உணர்வு சற்று அதிகமாகவே உள்ளது பேச்சிலேயே தெரிகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், பழி வாங்கும் உணர்வுடன்தான் வீரர்கள் ஜெர்மனியை சந்திக்கப் போகிறார்கள். ஜெர்மனியன் வியூகத்தை தடுத்து உடைத்து உள்ளே புகுந்து எங்களது வீரர்கள் சாதிப்பார்கள். அவர்களது வீரர்களை சமாளிக்கத் தேவையான வீரர்கள் எங்கள் பக்கம் நிறையவே உள்ளனர் என்கிறார் மாரடோனா.
பார்க்கலாம், யாருடைய பலம் வெல்லப் போகிறது என்று.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications