பழிவாங்கக் காத்திருக்கும் அர்ஜென்டினா

மெஸ்ஸி மேஜிக் இதுவரை அர்ஜென்டினாவுக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. அவர் கோல் போடாவிட்டாலும் கூட அர்ஜென்டினா போட்ட பெரும்பாலான கோல்கள் மெஸ்ஸியின் மேஜிக் கால்கள் மூலமாகவே வந்துள்ளன.
இன்றைய போட்டி அர்ஜென்டினாவுக்கு கூடுதல் விசேஷமானது. காரணம், கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த அணி அர்ஜென்டினா. எனவே இன்றையப் போட்டியில் அதை வீழ்த்தி பழிதீர்க்க காத்திருக்கிறது அர்ஜென்டினா.
ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா 2 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன. இரு அணிகளுமே நல்ல பார்மில் உள்ளன.
நடப்புத் தொடரில்அர்ஜென்டினா எந்தப் பிசிரும் இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் அட்டகாசமான அணியாக அர்ஜென்டினா களம் இறங்கும் என பயிற்சியாளர் மாரடோனா கூறியுள்ளார்.
மெஸ்ஸி தவிர ஹிகுயனும் அட்டகாசமான பார்மில் உள்ளார். மேலும் டெமிசெலிஸும் கால் கொடுக்க காத்திருக்கிறார்.
அதேசமயம் ஜெர்மனி அணியில் மிரஸ்லோவ் குளோஸின் ஆட்டம் குறிப்பிடத்தக்கதாக அமையும். இவர் தவிர கக்காவ், தாமஸ் முல்லர் என சூப்பர் ஸ்டார்களும் உள்ளனர்.
இன்றைய போட்டி காலிறுதிப் போட்டி என்பதை விட இருஅணிகளுக்கும் இறுதிப் போட்டி போல. பிரேசில் தோற்று வெளியேறியுள்ளதால் தற்போது அர்ஜென்டினா மீது கோப்பை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் அர்ஜென்டினா ஆடுமா அல்லது பிரேசிலைப் போல பின்வாங்கி வெளியேறுமா என்பதை இன்று இரவு பார்க்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications