ஸ்பெயினை பழிவாங்க வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி-இறுதிக்குள் நுழையுமா?

யூரோ கோப்பை சாம்பியன் போட்டியில் இறுதிப் போட்டியில் தன்னை சாதுரியமாக வீழ்த்தி சாம்பியன் ஆன ஸ்பெயினை இன்று பழிவாங்க களம் இறங்குகிறது ஜெர்மனி.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து முன்னேறி விட்டது. அடுத்த அணியைத் தேர்வு செய்ய இன்று 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் ஜெர்மனியும், ஸ்பெயினும் மோதவுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த யூரோ கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியும், ஸ்பெயினும் மோதின. அந்த்ப போட்டியில் ஜெர்மனி தோற்று விட்டது.
அன்று விட்டதை இன்று ஜெர்மனி நிச்சயம் பிடித்து விடும் என ஜெர்மனி ரசிகர்கள் நம்புகிறார்கள். மேலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஜெர்மனி மட்டுமே தொடக்கத்திலிருந்து பிரமாதமாக ஆடி வருகிறது. எனவே ஸ்பெயினை அது எளிதில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நாக் அவுட் ரவுண்டில் இங்கிலாந்து 4 கோல்கள் போட்டு வீழ்த்திய ஜெர்மனி, காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் அதே வைத்தியத்தை அளித்து விரட்டியடித்தது.
அதேசமயம், ஸ்பெயின் அணி பராகுவே மற்றும் போர்ச்சுகலுடனான போட்டிகளின்போது சிறப்பான பார்மைக் காட்டவில்லை. டேவிட் வில்லா போட்ட அதிர்ஷ்டகரமான கோல்கள்தான் அப்போட்டிகளில் ஸ்பெயினைக் காப்பாற்றியது.
ஜெர்மனி அணியில் தாமஸ் முல்லர், குளோஸ், ஓசில் என அட்டகாசமான வீரர்கள் அதகளம் பண்ண காத்திருக்கின்றனர்.
அதேசமயம், ஸ்பெயின் அணியும் வில்லா தலைமையில் ஜெர்மனியை விரட்டியடிக்க காத்திருக்கிறது.
இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை ஸ்பெயின். இந்த முறை வாய் வரைக்கும் வந்து விட்ட வாய்ப்பை கப்பென்று பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அது தீவிரமாகஉள்ளது.
அதேசமயம், தனது நான்காவது கோப்பைக் கனவை நனவாக்க ஜெர்மனி தீவிரமாக உள்ளது. இரு அணிகளையும் பொறுத்தவரை இது இறுதிப் போட்டி என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications