தோற்றது ஜெர்மனி-வென்றது ஆக்டோபஸின் கணிப்பு

இந்த பால் ஆக்டோபஸ்தான் சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின்தான் ஜெயிக்கும் என கணித்தது நினைவிருக்கலாம்.
பெர்லினில் உள்ள இந்த ஆக்டோபஸ், இதற்கு முன்பு இரண்டு முறை ஜெர்மனி கோப்பையை வெல்லும் என கணித்திருந்தது. அதன்படியே ஜெர்மனியும் வென்றது. நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலும் அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிராக ஜெர்மனி வெல்லும் என கணித்திருந்தது. அதன்படியே நடந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த ஆக்டோபஸை வைத்து ஒரு கணிப்புக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணியின் கொடிகளை ஒரு தொட்டியில் விட்டனர். பின்னர் ஆக்டோபஸை அதன் மீது படரச் செய்தனர். அப்போது அது ஸ்பெயின் கொடி இருந்த தொட்டி மீது முழுமையாக படர்ந்தது. இதன் மூலம் அரை இறுதியில் ஸ்பெயின்தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை ஜெர்மனி ரசிகர்கள் ஏற்கவில்லை. இந்த முறை பாலின் கணிப்பு பொய்யாகும் என நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் ரசிகர்கள் கணிப்புதான் பொய்யாகிப் போனது. ஜெர்மனி தோற்றது, ஸ்பெயின் வென்று விட்டது.
ஸ்பெயினின் கார்லஸ் புயோல் தலையால் முட்டி போட்ட அபாரமான கோலால் ஜெர்மனி வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
கடைசியில் ஆக்டோபஸின் கணிப்பே வென்றதால் அதன் மீது ஜெர்மனி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் உலக அளவில் பால் பிரபலமாகி விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications