3வது இடம் யாருக்கு? இன்று ஜெர்மனி, உருகுவே மோதல்

உலகக் கோப்பைப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. நாளை நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று இரவு 3வது இடத்தை இறுதி செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது. இதில் ஜெர்மனியும், உருகுவேயும் மோதுகின்றன.
அரை இறுதிப் போட்டியில் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியைத் தழுவிய அணிகள் இவை. புண்பட்டுப் போயுள்ள மனதுக்கு 3வது இடம் கிடைத்த சந்தோஷ மருந்தைத் தடவ இரண்டு அணிகளும் தீவிரமாக உள்ளன.
ஜெர்மனி அணி தனது அரை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஜெர்மனியால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது ஜெர்மனி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதேசமயம், உருகுவே அணி, 2-3 என்ற கோல் கணக்கில் கடுமையாகப் போராடி நெதர்லாந்திடம் வீரத் தோல்வியைச் சந்தித்தது.
இரு அணிகளும் ஆறுதல் வெற்றியைப் பெற காத்துள்ளன.
இந்த நிலையில் ஜெர்மனி அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மிரஸ்லோவ் குளோஸுக்கு முதுகு வலி வந்துள்ளதாம். அதேபோல கேப்டன் லஹாம், ஸ்டிரைக்கர் பொடோல்ஸ்கி ஆகியோருக்கும் கூட காய்ச்சல் வந்துள்ளது. பயிற்சியாளர் ஜோக்கிமும் கூட காய்ச்சலால் அவதிப்படுகிறார்.
இதனால் இன்றைய போட்டியில் முக்கிய வீரர்கள் சிலர் விளையாடாமல் போகக் கூடும் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications