Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களமிறங்கும் 'போர்ச்சுகலின்' ரொனால்டோ.. வியூகம் வகுத்து மோதும் ஜெர்மனி!!

சால்வடார்: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியும் 'அபாயகரமான' ஆட்டக்காரர் என்று பெயரெட்டுத்த ரொனால்டோவின் போர்ச்சுகலும் இன்று மோதுகின்றன.

பிரேசிலில் நடைபெற்று வரும் 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல் இடம்பெற்றுள்ளன. இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது.

3 முறை சாம்பியன்

3 முறை சாம்பியன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 1954, 1974 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இதுவரை ஜெர்மனி

இதுவரை ஜெர்மனி

2002ஆம் ஆண்டு ஜெர்மன் அணி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அதன் பின்னர் 2006, 2010ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறி 3வது இடத்தை பிடித்தது ஜெர்மனி. ஜெர்மனி அணியின் மிராஸ்லாவ் குளோஸ் 2002, 2006, 2010 உலகக் கோப்பைகளில் விளையாடியவர்.

ரொனால்டோ

ரொனால்டோ

ஆனால் போர்ச்சுகல் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. அதே நேரத்தில் போர்ச்சுகலின் ரொனால்டோவின் ஆட்டம் அபாரமானது. அவர் பந்துகளை 'லாவகமாக' கடத்திச் செல்லுவதில் திறன் படைத்தவர். அவரை சமாளிப்பதுதான் ஜெர்மனியின் முதன்மை வியூகமாக இருக்கும்.

ஜெர்மனி- போர்ச்சுகல்

ஜெர்மனி- போர்ச்சுகல்

இதுவரை ஜெர்மனியும் போர்ச்சுகலும் 17 முறை மோதியுள்ளன. ஆனால் ஜெர்மனிதான் 9 முறை வென்றுள்ளது. போர்ச்சுகல் 3 போட்டிகளில் வென்றுள்ளது. 5 ஆட்டங்கள் சமனில் முடிவடைந்துள்ளன.

என்ன நடக்குமோ?

என்ன நடக்குமோ?

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பலம் வாய்ந்த உருகுவே என பல அணிகள் தோல்வியை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்றைய போர்ச்சுகல்- ஜெர்மனி போட்டியில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 16, 2014, 10:51 [IST]
Other articles published on Jun 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+