ஜெயித்தால் 'நாக் அவுட்'-சிக்கலில் ஜெர்மனி

டி பிரிவில் தற்போது கானா அணி 2 போட்டிகளில் ஆடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் டிரா என 4 புள்ளிகளுடன் உள்ளது. ஜெர்மனி அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 3 புள்ளிகளுடன் செர்பியா 3வது இடத்திலும், 1 புள்ளியுடன் ஆஸ்திரேலியா கடைசி இடத்திலும் உள்ளன.
இன்று நடைபெறும் போட்டியில் கானாவை சந்திக்கும் ஜெர்மனி அதில் வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தோற்றால் 2வது இடத்திலேயே இருக்கும். அதேசமயம், செர்பியா ஆஸ்திரேலியாவை வென்று விட்டால், 2வது இடத்திற்கு வந்து விடும். ஜெர்மனி 3வது இடத்திற்குத் தள்ளப்படும்.
ஒரு வேளை ஜெர்மனி கானாவிடம் தோற்று, செர்பியா-ஆஸ்திரேலியா போட்டி டிரா ஆனாலும் ஜெர்மனிக்குத்தான் சிக்கல்.
இன்றைய போட்டியில் ஒருங்கிணைந்து ஆடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என தனது வீரர்களுக்கு ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோ அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தோற்று போட்டித் தொடரை விட்டு ஜெர்மனி வெளியேறினால், உலகக்கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக அது முதல் சுற்றோடு நடையைக் கட்டிய பெருமையைச் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications