டி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஜெர்மனியிடம் 0-1 என்ற கணக்கில் கானா தோல்வி அடைந்தது. இருப்பினும் கோல்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி விட்டு தப்பிப் பிழைத்து ரவுண்ட் 16க்குள் நுழைந்து விட்டது.
நேற்றைய போட்டியில் தோற்காமல் டிரா செய்தாலே போதுமானது என்ற நிலையில்தான் போட்டியை சந்தித்தது கானா. அதேசமயம், ஜெர்மனி கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலை.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஜெர்மனி வென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவை விட கூடுதல் கோல்கள் போட்டிருந்த காரணத்தால், கானா தப்பிப் பிழைத்து அடுத்த ரவுண்டுக்குப் போக முடிந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் ஒருகோலும் விழவில்லை. ஆனால் 2வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் மசூத் ஓஸில் 60வது நிமிடத்தில் கோலடித்து ஜெர்மனிக்கு உயிர் கொடுத்தார். அதன் பின்னர் ஜெர்மனி தடுப்பாட்டத்தில் குதித்தது. கானோவோ, கோல் போட வழி கிடைக்காமல் தடுமாறியது. இருப்பினும் விடா முயற்சியுடன் கடுமையாக போரிட்டது. ஆனாலும் கோல் வாய்ப்புகள் தான் அமையாமல் போய் விட்டது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]