டிரா செய்தால் வரலாறு!

அப்படி நடந்தால் உலகக் கோப்பை போட்டி ஒன்றின் நாக் அவுட் ரவுண்டுக்கு முதன் முதலாக முன்னேறிய பெருமை ஜப்பானுக்கு கிடைக்கும்.
அதேசமயம், இரு அணிகளுக்கும் இன்று வெற்றி கட்டாயம் தேவை. தோற்றால் இரு அணிகளுமே வெளியேற நேரிடும்.
கடந்த மூன்று உலகக்கோப்பைப் போட்டித் தொடர்களிலும் தவறாமல் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறியுள்ளது டென்மார்க். எனவே அதை இந்த முறையும் கட்டிக் காக்க அது உறுதியுடன் உள்ளது.
எனவே டென்மார்க் அணிக்கு இன்று வெற்றி பெறுவது கட்டாயம். டிரா ஆனால் கூட சிக்கலாகி விடும். எனவே இக்கட்டான நிலையில் அது ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டி பிபியை எகிற வைக்கும் போட்டியாக இருக்கும் என்கிறார் ஜப்பான் பயிற்சியாளரான தகேஷி ஒகடா.
ஏற்கனவே தென் கொரியா ரவுண்ட் 16க்கு தகுதி பெற்றுள்ளது. ஜப்பானும் தகுதி பெற்றால் ஒரே சமயத்தில் 2 ஆசிய அணிகள் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறிய பெருமை ஆசியர்களுக்குக் கிடைக்கும். ஜப்பான் அதைச் செய்யுமா, டென்மார்க் அதைத் தடுக்குமா?. இன்று இரவு தெரியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications