'குட்டி' ஜப்பானின் 'கெட்டி' சாதனை!

நேற்று நடந்த போட்டியில், வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ நாக் அவுட் ரவுண்டுக்குள் நுழையலாம் என்ற நிலை. ஆனால் ஜப்பானோ அட்டகாசமான வெற்றியைப் பெற்று கம்பீரமாக நாக் அவுட் ரவுண்டுக்குள் நுழைந்துள்ளது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீகிக்கை பயன்படுத்திய ஹோன்டா அபாரமான கோலாக்கி ஜப்பானை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்.
அதேபோல 30வது நிமிடத்தில் இன்னொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது ஜப்பானுக்கு இந்த முறை அதை கோலாக்கினார் என்டோ. ஆசிய அணியின் இந்த அபாரமான ஆட்டத்தால் ஆடிப் போனது ஐரோப்பிய அணியான டென்மார்க்.
இதனால் 2வது பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. கடுமையாக முட்டி மோதிய டென்மார்க் அணிக்கு 81வது நிமிடத்தில் தாம்சன் ஒருகோலடித்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், 87வது நிமிடத்தில் மீண்டும் ஒருகோலடித்து ஜப்பான் தனது நிலையை உறுதிப்படுத்தி விட்டது. அதன் பிறகு ஒருகோலும் விழவில்லை.
உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் ஜப்பான் 3 கோல்கள் போட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த வெற்றியின் மூலம், ஜப்பான் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறியுள்ளது. நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறியுள்ள 2வது ஆசிய அணி ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தென் கொரியா சீட் போட்டு வைத்து விட்டது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications