கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து?

உலகக் கால்பந்து வரலாற்றில் மாபெரும் அணிகளில் முக்கியமானவை ஜெர்மனியும், இங்கிலாந்தும். இந்த இரண்டு அணிகளும் இன்று முக்கியமான போட்டியில் மோதவுள்ளன.
இரு அணிகளும் இதுவரை மோதியதில் 12 முறை இங்கிலாந்தும், 10 முறை ஜெர்மனியும் வென்றுள்ளன. 5 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இங்கிலாந்து 47 கோல்களையும், 34 கோல்களை ஜெர்மனியும் போட்டியுள்ளன.
1990ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது அரை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அப்போது பெனால்டி ஷூட்அவுட் மூலம் இங்கிலாந்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜெர்மனி. இது இங்கிலாந்து வீரர்களின் மனதை தகர்த்தெறிந்தது.
அந்தத் தோல்வியை இங்கிலாந்து வீரர்கள் இன்றுவரை மறக்கவில்லை. அதேபோல 1996ல் நடந்த ஜெர்மனியுடனான தோல்வியும் இங்கிலாந்துக்கு மறக்க முடியாதது.
இவற்றையெல்லாம் துடைத்தெறிந்து காலிறுதிப் போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டார் வீரர்களான வேயன் ரூனி, ஸ்டீபன் ஜெரார்ட், ஜான் டெர்ரி ஆகியோர் ஜெர்மனிக்கு எதிராக கோல் போர் தொடுத்து தங்களது அணியை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஜெர்மனி அணியின் பிலிப் லஹாம், பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர், மிரஸ்லோவ் குளோஸ் ஆகியோர் உள்ளனர்.
இரு அணிகளும் நம்பிக்கையுடன் இன்றைய போட்டியை சந்திக்கின்றன. அதீத நம்பிக்கையுடன், அபாரமான திறமையும் இரு அணிகளின் வீரர்களிடமும் உள்ளதால் போட்டி சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications