4 கோல்கள் போட்டு இங்கிலாந்தை சுருட்டியது ஜெர்மனி

இளம் வீரர்கள் நிரம்பிய ஜெர்மனி அணியின் ஆவேச ஆட்டத்திற்கு முன்பு இங்கிலாந்து எறும்பு போல காணப்பட்டது. பழைய விரோதியான இங்கிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது ஜெர்மனி.
மிரஸ்லோவ் குளோஸ் (20வது நிமிடம்), பொடோல்ஸ்கி (32வது நிமிடம்) ஆகியோரின் தொடக்க கோல்களால் ஜெர்மனி எடுத்த எடுப்பிலேயே வலுவான நிலையை எட்டி விட்டது.
ஆனால் 37வது நிமிடத்தில் மாத்யூ அப்சன் ஒரு கோலடித்து இங்கிலாந்துக்கு சற்று நம்பிக்கையூட்டினார்.
இருப்பினும் தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடிய ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து மேலும் 2 கோல்களை அடித்து இங்கிலாந்தை சிதறடித்து விட்டனர்.
2வது பாதியில் விழுந்த இரண்டு கோல்களையும் முல்லரே போட்டார்.
நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் மிகுந்த கட்டுக்கோப்போடு விளையாடினர். ஆனால் இங்கிலாந்து வீரர்களில் கான்சன்ட்ரேஷன் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் சில நல்ல வாய்ப்புகளை அவர்கள் கோட்டை விட நேர்ந்தது.
நேற்று மிரஸ்லோவ் போட்ட கோல் ஜெர்மனிக்காக அவர் அடித்த 50வது கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications