வென்றால் வரலாறு!

எனவே இன்று வெல்லும் அணிக்கு அது மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
என்ன காமெடி என்றால், தனது லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பராகுவே வென்றிருந்தது. மற்ற இரு போட்டிகளையும் அது டிரா செய்து 5 புள்ளிகளுடன் இருந்தது. ஆனால் சாம்பியன் இத்தாலி அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றதால் பராகுவே டாப்புக்கு வந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது.
ஜப்பானைப் பொறுத்தவரை அது காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்ததே பெரிய ஆச்சரியம்தான். காமரூனையும், டென்மார்க்கையும் காலி செய்து விட்டு ஜப்பான் இந்த சுற்றுக்கு வந்துள்ளது. ஜப்பானின் இந்த முன்னேற்றத்துக்கு அந்த அணியின் ஸ்டார் வீரர் ஹோண்டாதான் முக்கிய காரணம்.
இன்றைய போட்டியில் மோதும் இந்த இரு அணிகளுமே எதிர்பாராதவிதமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்தவை என்பதால் இரு அணிகளின் மோதலும் ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications