முழுமையான ஜீனியஸ்... அவரை போல யாரையும் பார்த்ததில்ல... அஞ்சலி வீடியோ வெளியிட்ட கங்குலி
டெல்லி : மாரடைப்பால் கடந்த வாரம் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா உயிழந்தார்.
அவர் தனது ஹீரோ என்றும் அவர் தற்போது இல்லை என்றும் மனம் உருகி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவருடன் இருக்கும் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஒருவாரம் கடந்த நிலையில், தற்போது மீண்டும் மரடோனா விளையாடிய வீடியோவின் தொகுப்பை வெளியிட்டு தன்னுடைய அஞ்சலியை தெரிவித்துள்ளார் கங்குலி.
கடந்த புதன்கிழமை மாரடைப்பால் காலமானார் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா. அவரது மறைவிற்கு பிரபல விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் ஆழ்நத அஞ்சலி செலுத்தினர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் மரடோனா தனது ஹீரோ என்றும் அவருக்காகத்தான் கால்பந்தாட்டத்தை தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஒருவாரம் கடந்த நிலையில் தற்போது மரடோனா குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சவுரவ். முழுமையான மேதை என்றும். அவரை போல சிறப்பாக கால்பந்தாட்டத்தை விளையாடிய வீரரை தான் பார்த்ததில்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications