"கடல்லயே இல்லையாம்" மெஸ்ஸி ஜெர்சியை வாங்க படையெடுத்த மக்கள்.. அடிடாஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்!
ஜெர்மனி: அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஜெர்சி அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாகவும், இனி ஸ்டாக் இல்லை என்றும் அடிடாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை இது என்ற வார்த்தைகளை ரசிகர்கள் முனுமுனுக்க தொடங்கினார்கள்.
ஏனென்றால் கோப்பைகள், சாதனைகள், விருதுகள் என அனைத்தையும் வென்றிருந்த தலைவன் மெஸ்ஸியின் தலையில் கிரீடம் இல்லாததை போல் உலகக்கோப்பையை மட்டும் இதுவரை வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் மூலம் மீண்டும் தனது கனவை எட்டிபிடிக்க மெஸ்ஸி தயாரானார். சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்த போது, மெஸ்ஸி மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழந்தனர். ஆனால் லயோனல் மெஸ்ஸி ரசிகர்களிடம், எங்கள் மீதான நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களின் ஆட்டம் வரும் போட்டிகளில் இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா
லயோனல் மெஸ்ஸி சொல்லியதற்கு ஏற்ப ஒவ்வொரு போட்டியிலும் அர்ஜென்டினா அணி சிறந்த முன்னேற்றத்தை காட்டியது. ஒவ்வொரு போட்டியிலும் அட்டாக் மேல் அட்டாக் செய்து வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் லயோனல் மெஸ்ஸியும் ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான மேஜிக் கோல்களை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா அணி ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்ன்னேறியுள்ளது.

ஜெர்சி விற்பனை
இதனால் உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மெஸ்ஸியின் நம்பர் 10 எண் கொண்ட ஜெர்சியை ஏராளமான வாங்கி வருகின்றனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியை மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து பார்க்க வேண்டும் என்று அர்ஜென்டினா ஜெர்சியை தயார் செய்யும் அடிடாஸ் நிறுவனத்தின் கடைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

அடிடாஸ் விளக்கம்
இதன் காரணமாக மெஸ்ஸியின் நம்பர் 10 எண் கொண்ட ஜெர்சிகள் அனைத்து விற்று தீர்ந்துள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் என அனைத்திலும் ஜெர்சிக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் தரப்பில், பிரேசில், ஜப்பான், கத்தார், ஸ்பெயின் என ஏராளமான நாடுகளில் அடிடாஸ் நிறுவனத்தின் மெஸ்ஸியின் ஜெர்சி விற்பனையாகியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பைக்காக தயாரிப்பை அதிகப்படுத்தியும், இன்னும் மக்கள் அதிகமாக வாங்க முன்வந்துள்ளனர்.

ஸ்டாக் இல்லை
ஆனால் உடனடியாக மெஸ்ஸி ஜெர்சியை தயாரித்து அனுப்புவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. எங்கள் நிறுவனம் தரப்பில், முடிந்த வரை மெஸ்ஸியின் ஜெர்சியை அதிகமாகவும், வேகமாகவும் தயாரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் நாளை இறுதிப்போட்டி என்பதால், அனைவருக்கும் விற்பனை செய்ய முடியாது. உலகக்கோப்பைக்கு பின், மெஸ்ஸியின் ஜெர்சியை பல நாடுகளுக்கும் தயாரித்து அனுப்ப உள்ளோம். அனைத்து சைஸ்-களிலும் மக்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் இப்போதைக்கு ஸ்டாக் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications