Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை இறுதி போட்டியில் 3வது முறையாக அர்ஜென்டினா-ஜெர்மனி: நகத்தை கடிக்கும் ரசிகர்கள்

ரியோடி ஜெனிரோ: நாளை நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி.- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு சந்தித்த பைனல்களில் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன. இது மூன்றாவது முறை என்பதால் யார் பலமான அணி என்பதை நிர்ணயிக்கும் கவுரவ போட்டியாக மாறிப்போயுள்ளது இந்த பைனல். இதனால் ரசிகர்கள் டென்ஷனில் நகத்தை கடித்துக்கொண்டுள்ளனர்.

இறுதி போட்டி

இறுதி போட்டி

பிரேசிலில் கடந்த மாதம் 12ம்தேதி தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியில், கோப்பையை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு, தலைநகர், ரியோடி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

ஐரோப்பாவா, தென் அமெரிக்காவா?

ஐரோப்பாவா, தென் அமெரிக்காவா?

இதில், முன்னாள் சாம்பியன்களான ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்க கண்டத்து நாடான அர்ஜென்டினாவும் மோதுகின்றன. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3வது முறையாகும்.

முதல் மோதல்

முதல் மோதல்

1986ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஜாம்பவான் மாரடோனா தலைமையில் களமிறங்கியது அர்ஜென்டினா அணி. மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லோதர் மாத்தஸின் ஜெர்மனி அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.

பழி வாங்கல்

பழி வாங்கல்

1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி சுற்றில், ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டது. ஆனால் ஜெர்மனியின் வெற்றி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

சர்ச்சைக்குறிய வெற்றி

சர்ச்சைக்குறிய வெற்றி

அந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் போட இயலாத சூழ்நிலை நிலவியபோது, ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த போது கோல் பகுதிக்குள் புகுந்த ஜெர்மனி வீரரை, அர்ஜென்டினா அணியின் தடுப்பாட்டக்காரர் தள்ளிவிட்டார். இதையடுத்து ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது.இதனை பயன்படுத்தி ஜெர்மனி வீரர் பெர்ஹ்மே கோல் அடித்தார். போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி சாம்பியன் கோப்பையை ஏந்தியது.

சிகப்பு அட்டை சாதனை!

சிகப்பு அட்டை சாதனை!

இதுபோததென்று அந்தப்போட்டியில் பணியாற்றிய மெக்சிகோ நடுவரின் முடிவுகள் ஜெர்மனிக்கு சாதகமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்சகட்டமாக ஜெர்மனி வீரர் ஜர்ஜன் க்ளின்ஸ்மேனை தள்ளி விட்டதாக, அர்ஜென்டினா அணியின் பெட்ரோ, சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். உலகக்கோப்பை போட்டியில் சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பெட்ரோ. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தை எதிர்நோக்கியிருக்கிறது அர்ஜென்டினா அணி.

தென் அமெரிக்காவில் பாச்சா பலிக்குமா?

தென் அமெரிக்காவில் பாச்சா பலிக்குமா?

அதே நேரத்தில், இந்த உலக கோப்பையை ஜெர்மனி அணி வென்றால், தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை படைக்கும். இதற்கு முன்பு தென் அமெரிக்க நாடுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகள் எதிலுமே ஐரோப்பிய நாடுகள் வெற்றி பெற்றது கிடையாது.

Story first published: Saturday, July 12, 2014, 15:46 [IST]
Other articles published on Jul 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+