விட்டேனா பார்... களத்தில் இறங்கிய அரிந்தம்... சென்னையின் -மோஹுன் பகன் கோல் போடாம போட்டி டிரா!
பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடர் நடைபெற்று வரும் நிலையில நேற்றைய 42வது போட்டி சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் சமனில் முடிந்தது.
இதன்மூலம் ஐஎஸ்எல் 2020 புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் சென்னையின் எப்சி அணியின் கனவு தகர்ந்தது. ஆனால் ஏடிகே மோஹுன் பகன் அணி தான் நினைத்ததை போலவே முதலிடத்தில் சென்று அமர்ந்து கொண்டது.

டிராவில் முடிந்த போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 42வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகள் மோதின. 7வது இடத்தில் இருக்கும் சென்னையின் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் கனவுடன் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில் அதன் கனவு தகர்ந்தது.

டிரா ஆன போட்டி
இரு அணிகளின் வீரர்களும் கோல் அடிக்க மேற்கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் பொய்யாகிய நிலையில் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி டிரா ஆனது. ஆயினும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மும்பை சிட்டி அணியை பின்னுக்கு தள்ளும் மோஹுன் பகனின் கனவு நனவாகி, அந்த அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அரிந்தம் சிறப்பான செயல்பாடு
போட்டியின் துவக்கம் முதலே சென்னையின் அணி கோல் போடும் அனைத்து முயற்சிகளையும் சிறப்பாகவே கையாண்டது. ஆனால் எதிரணியின் கோல் கீப்பர் அரிந்தமின் சிறப்பான செயல்பாட்டால் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தகர்ந்தன.

முறியடித்த அரிந்தம்
போட்டியின் துவக்கத்திலேயே சென்னையின் அணியின் கேப்டன் ரபேல் கோல் அடிக்க முயன்றார். ஆனால் அரிந்தம் அதை தடுத்து அவரது முயற்சியை முறியடித்தார். இதேபோல லாலியான்சுவாலாவின் முயற்சியும் பொய்யானது. சென்னையின் அணியின் இத்தகைய பல்வேறு முயற்சிகளும் நேற்றைய போட்டியில் அரிந்தமால் முறியடிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications