Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புள்ளிகள் பட்டியலில் முதலிடம்... இந்த ஆண்டை முதலிடத்தில் முடிப்பது மகிழ்ச்சி... கோச் ஹபாஸ்!

பேம்போலிம் : நேற்றைய சென்னையின் எப்சி அணியுடனான ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 42வது போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் அணி மோதியது.

இரு அணிகளும் இந்த போட்டியில் கோல் எதுவும் அடிக்காமல் போட்டியை டிரா செய்தன. ஆயினும் புள்ளிகள் பட்டியலில் ஏடிகே மோஹுன் பகன் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தாலும் புள்ளிகள் படடியலில் முதலிடத்தில் இந்த ஆண்டை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக ஏடிகே மோஹுன் பகன் அணியின் கோச் ஆன்டோனியோ ஹபாஸ் தெரிவித்துள்ளார்.

42வது போட்டி

42வது போட்டி

ஐஎஸ்எல் தொடரின் நேற்றைய 42வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், போட்டியில் மோதிய சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகள் கோல் எதுவும் அடிக்காமல் போட்டியை சமன் செய்தன.

முதலிடத்தில் மோஹுன் பகன் அணி

முதலிடத்தில் மோஹுன் பகன் அணி

இதனிடையே இந்த போட்டியில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் மோஹுன் பகன் அணி ஐஎஸ்எல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த மும்பை சிட்டி அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் கீழே இறக்கியுள்ளது மோஹுன் பகன்.

ஆனாலும் மகிழ்ச்சி

ஆனாலும் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த போட்டி குறித்து தன்னுடைய ஏமாற்றத்தை ஏடிகே மோஹுன் பகன் அணியின் கோச் ஆன்டோனியோ ஹபாஸ் தெரிவித்துள்ளார். இந்த போட்டி நல்ல போட்டி என்று கூற முடியாது ஆனாலும் இந்த ஆண்டை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் முடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

முதலிடத்தை தீர்மானிக்கும் போட்டி

முதலிடத்தை தீர்மானிக்கும் போட்டி

இதனிடையே, இன்றைய ஐஎஸ்எல் 43வது போட்டியில் 8வது இடத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் 6வது இடத்தில் உள்ள கோவா அணிகள் மோதவுள்ளன. இதைதொடர்ந்து வரும் 2ம் தேதி மும்பை சிட்டி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி கொள்ளும் நிலையில் மட்டுமே மோஹுன் பகன் அணியின் முதலிடம் பறிபோகும்.

Story first published: Wednesday, December 30, 2020, 19:21 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+