For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 போட்டியில வெற்றி பெறல... அதனால என்ன... நாங்க எப்பவும் கூல்... கோச் ஹபாஸ் கலகல!

படோர்டா : கோவாவின் படோர்டா மைதானத்தில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 65வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் கடந்த இரு போட்டிகளில் தோற்ற நிலையிலும் எந்த நெருக்கடியும் அணிக்கு இல்லை என்று ஏடிகே மோஹுன் பகன் அணியின் கோச் ஆன்டோனியோ ஹபாஸ் தெரிவித்துள்ளார்.

65வது போட்டி

65வது போட்டி

கோவாவின் படோர்டா மைதானத்தில் ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 65வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வலிமையாக அமர்ந்துள்ள மோஹுன் பகன் அணி 6வது இடத்தில் உள்ள சென்னையின் அணியுடன் இன்றைய போட்டியில் மோதவுள்ளது.

நெருக்கடி இல்லை

நெருக்கடி இல்லை

மும்பை சிட்டி எப்சி மற்றம் எப்சி கோவா அணிகளுடனான கடந்த இரு போட்டிகளில் ஏடிகே மோஹுன் பகன் அணி வெற்றி பெறவில்லை. ஆயினும் இந்த தோல்விகளால் தங்களது அணிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை என்று அந்த அணியின் கோச் ஆன்டோனியோ ஹபாஸ் தெரிவித்துள்ளார்.

சில நேரம் தோல்வி

சில நேரம் தோல்வி

இத்தகைய சாம்பியன்ஷிப்களில் சில நேரம் வெற்றியும் சில நேரம் தோல்வியும் கிடைக்கலாம் என்று தெரிவித்துள்ள ஹபாஸ், கடந்த இரு போட்டிகளில் வலிமையான அணிகளுடன் மோதியதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தங்களது அணி, முதல் பாதியில் இருந்தாலும் இன்னும் அதிகமாக முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோல் இன்றி டிரா

கோல் இன்றி டிரா

இந்த தொடரில் இன்று மோதவுள்ள மோஹுன் பகன் மற்றும் சென்னையின் அணிகள் முன்னதாக மோதிய போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் அந்த போட்டியை டிரா செய்தன. இந்நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வெற்றி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பாசிட்டிவ் மனநிலையில் கோச்

பாசிட்டிவ் மனநிலையில் கோச்

இந்நிலையில் அணி வீரர்களின் தொடர் காயங்களால் பின்தங்கிய ஆட்டத்தை அளித்து வருகிறது சென்னையின் அணி. சமீபத்திய காயத்திற்கு சொந்தக்காரர் அணியின் கேப்டன் ரபேல் கிரிவாலேரோ. இந்நிலையில் ரபேல் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவு என்பதை ஒப்புக் கொண்டுள்ள அணியின் கோச் சிசாபா லாஸ்லோ, ஆனால் இருக்கும் அணியிலிருந்து சிறப்பானவற்றை கொண்டு ஆடும் பாசிட்டிவ் மனநிலை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 21, 2021, 19:53 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
I can take everything positively, You have to take the best out of the team -Csaba Laszlo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+