Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது 6வது இடங்களில் உள்ள அணிகள்... வெற்றிக்கான தீவிரத்தில் மோஹுன் பகன் & ஜாம்ஷெட்பூர்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 94வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதவுள்ளன.

ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் மோஹுன் பகன் அணி 2வது இடத்தில் வலிமையாக உள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் அணி 6வது இடத்தில் உள்ளது.

94வது போட்டி

94வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 94வது போட்டி இன்றைய தினம் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகள் மோதவுள்ளன.

சிறப்பான ஆட்டங்கள்

சிறப்பான ஆட்டங்கள்

இரு அணிகளும் கடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மோஹுன் பகன் அணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெங்களூரு அணியை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஜாம்ஷெட்பூர் அணி சென்னையின் அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

2வது இடத்தில் மோஹுன் பகன்

2வது இடத்தில் மோஹுன் பகன்

ஏடிகே மோஹுன் பகன் அணி, கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வலிமையாக உள்ளது. கடந்த 16 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளை பெற்று 33 புள்ளிகளை இந்த அணி பெற்றுள்ளது.

வெற்றி பெறும் தீவிரம்

வெற்றி பெறும் தீவிரம்

இந்நிலையில் ஜாம்ஷெட்பூர் அணியும் இதுவரை விளையாடியுள்ள 17 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று 21 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது. கடந்த 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ப்ளே -ஆப் சுற்றிற்கு தகுதி பெறும் முனைப்புடன் காணப்படுகிறது. அதனால் இன்றைய போட்டியை ஜாம்ஷெட்பூர் தீவிரமாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்சில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Story first published: Sunday, February 14, 2021, 22:10 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+