Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 கோல்கள்.. பிரேசிலைச் சாய்த்த ஜெர்மனியோடு சேர்ந்து உலக சாதனை படைத்த குளோஸ்!

பெலோ ஹாரிசான்டே: உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் ஜெர்மனியின் மிரஸ்லோவ் குளோஸ்.

நேற்று பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் தனது 16வது கோலை அடித்து இந்த சாதனைச் சரித்திரத்தை எழுதினார்.

இதற்கு முன்பு பிரேசிலின் ரொனால்டோ 15 கோல்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை தனது முந்தைய போட்டியில் சமன் செய்திருந்தார் குளோஸ். நேற்று அதை முறியடித்தார்.

முதல் பாதியில் சாதனை

முதல் பாதியில் சாதனை

நேற்றைய பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தின்போது குளோஸ் ஒரு கோல் போட்டார். அது அவரது உலக சாதனை கோலாகவும் மாறியது ஜெர்மனி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது.

4வது உலகக் கோப்பை

4வது உலகக் கோப்பை

குளோஸுக்கு இது 4வது உலகக் கோப்பைத் தொடராகும்.

ரொனால்டோ சாதனை முடிந்தது

ரொனால்டோ சாதனை முடிந்தது

இதுவரை பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ 15 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை நேற்று குளோஸ் முடிவு கட்டினார்.

2வது சாதனை

2வது சாதனை

கடந்த ஒரு மாதத்தில் குளோஸ் நிகழ்த்திய 2வது சாதனை இது. இதற்கு முன்பு உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு ஆர்மீனியாவுடன் நடந்த பயிற்சிப் போட்டியில் ஜெர்மனி அணி 6-1 என்ற கணக்கில் வென்றது. அதில் தனது 69வது சர்வதேச கோலை அடித்து அதுவரை 68 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் என்ற பெயரை வைத்திருந்த ஜெர்ட் முல்லரின் சாதனையை குளோஸ் முறியடித்திருந்தார்.

தற்போது உலக சாதனையைப் படைத்துள்ளார்.

Story first published: Wednesday, July 9, 2014, 9:45 [IST]
Other articles published on Jul 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+