Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2018 நியாபகம் இருக்கா.. சோலோ சம்பவம் செய்த ப்ரூனோ ஃபெர்னான்டெஸ்.. உருகுவேவை பழிதீர்த்த போர்ச்சுகல்!

தோஹா: உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எச் குரூப்பில் உள்ள போர்ச்சுகல் 0- உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வென்றால், பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகளுக்கு பின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை பெறும்.

இன்னொரு உருகுவே - தென் கொரியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. இதனால் போர்ச்சுகல் - உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 போர்ச்சுகல் ஆதிக்கம்

போர்ச்சுகல் ஆதிக்கம்

தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருகுவே அணியின் பெண்டாகூருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க போர்ச்சுகல் அணியின் அட்டாக் தொடங்கியது. ஒவ்வொரு நிமிடத்திலும் போர்ச்சுகல் அணியின் வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். சுமார் 30 நிமிடங்களில் பெரும்பாலும் போர்ச்சுகல் அணி வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்று கொண்டு இருந்தது.

முதல் பாதி முடிவு

முதல் பாதி முடிவு

ஆனால் 32வது நிமிடத்தில் திடீரென உருகுவே அணியின் பெண்டாகூர் தனியாளாக பந்தை போர்ச்சுகல் அணியின் வீரர்கள் டிரிபிள் செய்து கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் போர்ச்சுகல் அணியின் டியாகோ கோஸ்டாவின் அபாரமான செயலால், கோல் தடுக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு இருந்தது. எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் கோல் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிவுக்கு வந்தது.

 சூடுபிடித்த 2ம் பாதி

சூடுபிடித்த 2ம் பாதி

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. அந்த பரபரப்புடன் பரபரப்பாக ப்ரூனோ ஃபெர்னான்டஸ் கொடுத்த பாஸ், கோலாக மாறியது. இதன் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி முன்னிலை பெற்றது. இதனால் உருகுவே அணி கோல் அடிக்க வேண்டிய நிலை உருவானது. அங்கிருந்து தொடர்ந்து அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கியது. இதற்கேற்ப அனுபவ வீரர் சுவாரஸை உருகுவே அணி களமிறக்கியது.

 போர்ச்சுகல் மாற்றம்

போர்ச்சுகல் மாற்றம்

அதற்கேற்ப 76வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் மிக எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை, உருகுவே வீரர் சுவாரஸ் தவறவிட்டார். அதேபோல் கோமெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் அடித்து வெளியேறியது. இதன் பின்னர் போர்ச்சுகல் அணி 3 மாற்று வீரர்களை களமிறக்கியது. இதன் பின்னர் போர்ச்சுகல் அணியினர் அதிக நேரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்தனர்.

ப்ரூனோ ஃபெர்னான்டெஸ்

ப்ரூனோ ஃபெர்னான்டெஸ்

தொடர்ந்து 88வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் ட்ரிபிள் செய்த பந்தை, உருகுவே அணியின் கிமெனெஸ் கைகளில் பட்டு சென்றது. இதனால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ பெர்னான்டெஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை பெஞ்ச்-ல் இருந்து பார்த்த ரொனால்டோ, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

போர்ச்சுகல் வெற்றி

போர்ச்சுகல் வெற்றி

பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்களில் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது கோஸ் போஸ்டில் அடித்து வெளியேறியது. இறுதியாக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ், பிரேசில் அணிகளுக்கு பின் போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

2018 உலகக்கோப்பை

2018 உலகக்கோப்பை

அதேபோல் 2018ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் உருகுவே அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி வெளியேறும். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உருகுவே அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் கால் பதித்துள்ளது.

Story first published: Tuesday, November 29, 2022, 2:55 [IST]
Other articles published on Nov 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+