Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது 8வது இடங்களில் உள்ள அணிகள் மோதல்... மாற்றத்தை ஏற்படுத்த தீவிரம்

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 89வது போட்டி இன்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன.

இன்றைய 89வது போட்டியில் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள இந்த அணிகள் மோதவுள்ளன.

89வது போட்டி

89வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 89வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன.

சொதப்பலான ஆட்டம்

சொதப்பலான ஆட்டம்

இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சென்னையின் எப்சி இந்த தொடரின் துவக்கம் முதலே சிறப்பான போட்டிகளை அளிக்க தவறியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் சென்னையின் எப்சி உள்ளது.

ஒரேயொரு கோல்

ஒரேயொரு கோல்

இதனிடையே அதே 16 போட்டிகளில் விளையாடி 18 புள்ளகளுடன் ஜாம்ஷெட்பூர் எப்சி 7வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளுமே தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த 5 போட்டிகளில் விளையாடியுள்ள மெரினா மச்சான்ஸ் அணி ஒரேயொரு கோலை மட்டுமே போட்டுள்ளது.

3 கோல்கள்

3 கோல்கள்

மாறாக ஜாம்ஷெட்பூர் அணி கடந்த 6 போட்டிகளில் விளையாடி 3 கோல்களை அடித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளின் இன்றைய போட்டி ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலிலும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கூறப்பட்டுள்ளது. ஆயினும் இரு அணிகளில் ஒரு அணி தனது நிலையை சற்றே முன்னேற்றிக் கொள்ளலாம். இன்றைய போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் கண்டுகளிக்கலாம்.

Story first published: Wednesday, February 10, 2021, 23:58 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+