Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

102வது போட்டி... கேரளாவுடன் மோதி டிரா செய்த சென்னையின் எப்சி!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 102வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மில் நடைபெற்றது.

சென்னையின் எப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் மோதிய இந்த போட்டி 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்துள்ளது.

இதன்மூலம் கோச் சிஸாபா லாஸ்லோ தலைமையிலான சென்னையின் எப்சி இந்த சீசனில் 20 போட்டிகளில் விளையாடி 20 புள்ளிகளுடன் 8வது இடத்தில் தனது ஆட்டத்தை முடித்துள்ளது.

102வது போட்டி

102வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 102வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மில் நடைபெற்றது. இதில் சென்னையின் எப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்துள்ளன.

20 புள்ளிகள்

20 புள்ளிகள்

இந்த போட்டியின்மூலம் கோச் சிஸாபா லாஸ்லா தலைமையிலான சென்னையின் எப்சி இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 20 போட்டிகளில் 20 புள்ளிகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. கேரளாவுடனான இந்த போட்டியை வெற்றி பெற மேற்கொண்ட அந்த அணியின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.

போட்டி டிரா

போட்டி டிரா

போட்டியின் துவக்கத்தில் 10வது நிமிடத்திலேயே சென்னையின் எப்சி அணியின் பத்குலோ ஒரு கோல் அடித்து அந்த அணியை லீட் செய்தார். ஆனால் 29வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கேரி ஹூப்பர் அடித்த கோல் போட்டியை டிரா செய்தது. கோல் அடிக்க சென்னையின் எப்சி அணியின் வீரர்கள் மேற்கொண்ட 6க்கும் மேற்பட்ட முயற்சிகள் வீணாக முடிந்தது.

நிலையான ஆட்டம்

நிலையான ஆட்டம்

முன்னதாக அனிருத் தாப்பாவின் கோல் அடிக்கும் முயற்சியை கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கீப்பர் அல்பினோ கோம்ஸ் தகர்த்தார். இரண்டாவது பகுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அந்த அணிக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தது. இரண்டாவது பகுதியில் இரு அணிகளும் நிலையான ஆட்டத்தை அளித்தன.

Story first published: Monday, February 22, 2021, 15:30 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+