For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

நீ கொடுத்ததை திருப்பித் தருவேன்.. கொலம்பியாவுக்கு பதிலடி தர ஜப்பான் ரெடி!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் எச் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கொலம்பியா, ஜப்பான் மோதுகின்றன.

colombia to meet japan in the fifa world cup

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எச் பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் கொலம்பியா, ஜப்பான் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும், செனகலும் சந்திக்கின்றன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

இந்த நிலையில், கடைசியாக உள்ள எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் கொலம்பியாவும், ஜப்பானும் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும், செனகலும் சந்திக்கின்றன.
----
பிரிவு எச்
கொலம்பியா - ஜப்பான்
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
* உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் 2ல் மட்டுமே ஜப்பான் வென்றுள்ளது.
* இதுவரை விளையாடிய 5 முதல் ஆட்டங்களில் ஜப்பான் ஒன்றில் மட்டும் வென்றுள்ளது. ஒரு டிரா, 3 தோல்விகளை கண்டுள்ளது.
* கொலம்பியா இதுவரை விளையாடியுள்ள 18 ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு கோலாவது அடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா 33, ஆஸ்திரியா 29 ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு கோலாவது அடித்துள்ளன.
------
முக்கிய வீரர்கள்

கொலம்பியா - கடந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து தங்க பூட் வென்றவர் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ். பந்தை லாவகமாக கையாளுவதிலும், அதை கோலாக்குவதிலும் கில்லி.

ஜப்பான் - ஷின்ஜி ககாவா, கேசுகோ ஹோன்டா, ஷின்ஜி ஒகாசாகி போன்ற வீரர்கள் இருந்தாலும், முக்கிய பங்கை வகிக்கப் போகிறவர் யுயா ஒசாகா. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பந்தை தன்வசப்படுத்தக் கூடியவர். அவரிடம் பந்து சென்றுவிட்டால், பிரிப்பது சுலபமல்ல.
---
கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியதே கொலம்பியாவின் மிகச் சிறந்த இடமாகும். கடுமையான போராடக் கூடிய அணியாக கொலம்பியா உள்ளது. 2014ல் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் தனி ஆளாக, அணியை காலிறுதி வரை அழைத்துச் சென்ற ஆட்டத் திறனை மறக்க முடியாது. தற்போது அவருடன் ரடாமெல் பால்கோ ஆகியோரும் சேர்ந்துள்ளனர்.

2002, 2012ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் விளையாடிய ஜப்பான், கடந்த உலகக் கோப்பையில் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது.

கடந்த உலகக் கோப்பையிலும் கொலம்பியா மற்றும் ஜப்பான் ஒரே பிரிவில் இருந்தன. கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் கொலம்பியாவுடன் ஜப்பான் மோதியது.

அதில் 4-1 என கொலம்பியா வென்றது. அதனால் ஜப்பான் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. அதற்கு பதிலடி கொடுக்க தற்போது ஜப்பானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Tuesday, June 19, 2018, 9:39 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
Colombia to meet japan in the group h match in the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X