Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஸ்டாரிகா மிரட்டியது... ஆனால் செர்பியா அசத்தியது... 1-0 என வென்றது!

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Costa Rica failed to prove against serbia in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா 1- 0 என கோஸ்டாரிகாவை வென்றது
----
பிரிவு இ
செர்பியா - கோஸ்டாரிகா
1 - 0
----
கடந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து அணிகளுடன் கோஸ்டாரிகா இடம்பெற்றது. பிரிவு சுற்றில் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தாலி, உருகுவேயை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தில் பிடித்த கோஸ்டாரிகா காலிறுதியில் தோல்வியடைந்தது.

செர்பியா கடைசியாக விளையாடிய இரண்டு உலகக் கோப்பைகளில் பிரிவு சுற்றில் 6ல் ஐந்தில் தோல்வியடைந்தது. ஜெர்மனிக்கு எதிராக மட்டுமே வென்றது.

1998ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் விளையாடிய செர்பியா, கடந்த உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறவில்லை. பல திறமையான வீரர்கள் இருந்தாலும் செரியா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு நுழைந்து அசத்தியது கோஸ்டாரிகா. உலகக் கோப்பையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்தது.

இந்த உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, ஆட்டத்தில் 53 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. அசத்தலான அதிரடி ஆட்டத்தில் அந்த அணி ஈடுபட்டது.

இடையில் கிடைத்த சைக்கிள் கேப்பில், செர்பியா அணி பெரிய டிரக்கையே ஓட்டியது. கோஸ்டாரிகாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை அபாரமாக தடுத்து நிறுத்தியது.

மேலும் 10 முறை கோலடிக்கும் வாய்பையும் பெற்றது. அதில் 3 முறை கோல் பகுதிக்குள் பந்து சென்றது. 56வது நிமிடத்தில் கோலரோவ் அபாரமாக கோலடித்து, கோஸ்டாரிகா அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

அதன்பிறகு எவ்வளவு முட்டி மோதியபோதும், கோஸ்டாரிகாவுக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற செர்பியா, இ பிரிவில் தற்போதைக்கு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரவு நடக்கும் இ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பிரேசில், சுவிட்சர்லாந்துடன் மோத உள்ளது.

அடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு செர்பியாவுக்கு பிரகாசமாக உள்ளது.

Story first published: Sunday, June 17, 2018, 19:40 [IST]
Other articles published on Jun 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+